பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதிக்கு இந்தியாவில் குடியுரிமை...?
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் இராணுவத் தலைவருமான ஜெனரல் பர்வேஸ் முஷாரப் ஒரு தேசத்துரோக வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தற்போது மருத்துவ சிகிச்சை கோரி துபாயில் சுயமாக நாடுகடத்தப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் இராணுவத் தலைவருமான ஜெனரல் பர்வேஸ் முஷாரப் ஒரு தேசத்துரோக வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தற்போது மருத்துவ சிகிச்சை கோரி துபாயில் சுயமாக நாடுகடத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆளும் தேசியவாத பாரதீய ஜனதா கட்சியின் (BJP) நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, முஷாரப்பின் தேசத்துரோக வழக்கில் விரிவான தீர்ப்பை அறிவிப்பதற்கு முன்னர், இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டம் அவருக்கு குடியுரிமை வழங்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடெங்கிலும் போராட்டம் வெடித்து வரும் நிலையில் தற்போது பாஜக தலைவரின் ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தின் சாரம்சம், பாகிஸ்தான், அப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற இஸ்லாமியர்களை பெரும்பான்மை மக்களாக கொண்டு நாடுகளில் இருந்து துன்புறுத்தலின் பேரில் இந்தியாவிற்கு அகதிகளாக வந்த மக்களுக்கு குடியுரிமை வழங்குவதாகும். இந்நிலையில் தற்போது குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானில் இருந்து சவுதிக்கு சுய நாடுகடத்தப்பட்டுள்ள முஷாரபுக்கு இந்திய தலைவர் குடியுரிமை அளிக்கப்படும் என தெரிவித்திருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் கவனத்திற்கு., முன்னாள் பாகிஸ்தான் ஜனாதிபதி இந்தியாவின் தேசிய தலைநகரின் பழைய நகரப் பகுதியில் உள்ள தரியகஞ்ச் பகுதியில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த டிசம்பர் 17, செவ்வாயன்று, இஸ்லாமாபாத்தை தளமாகக் கொண்ட சிறப்பு நீதிமன்றம், பாகிஸ்தானின் முன்னாள் தலைவருக்கு எதிராக நீண்டகாலமாக வரையப்பட்ட உயர் தேசத் துரோக வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
டிசம்பர் 31, 2014-க்கு முன்பு பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மத ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டு இந்தியாவுக்கு முன்னர் வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் புதிதாக இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கடந்த வாரம் துவங்கி இந்தியா முழுவதும் பரவலான போராட்டங்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.