பாஜக வேட்பாளர்கள் பட்டியல் 2024: தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் உள்ள, பாஜக மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இருந்து பல எம்.பி.க்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. அதே சமயம் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மக்களவை தேர்தலில் 400 இடங்களில் வெற்றி என்ற இலக்கினை எட்ட, பல எம்எல்ஏக்கள் மக்களவைத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர்கள் விபரமும் இந்த முதல்பட்டியலில் இல்லை. தமிழகத்தில் கூட்டணி கட்சிகள் குறீத்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க பாஜக சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

195 மக்களவைத் தொகுதிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது


தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே 195 மக்களவை வேட்பாளர்களை கட்சியின் டெல்லி தலைமையகத்தில் அறிவித்தார். பிரதமர் மோடி வாரணாசியில் போட்டியிடுவார் என்று கூறினார். முதல் பட்டியலில், 28 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 50 வயதுக்குட்பட்ட 47 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 47 இளைஞர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. 27 எஸ்சி, 18 எஸ்டி மற்றும் 57 ஓபிசி வகுப்பை சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வழங்கப்பட்டுள்ளது.


பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே, பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியிலும், கிரண் ரிஜிஜு மேற்கு அருணாச்சல பிரதேசத்திலும், விஷ்ணு பனா ரே அந்தமான் நிக்கோபரிலும்,  தபீர் காவ் கிழக்கிலும் போட்டியிடுவார்கள் என்று தாவ்டே கூறினார். மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானி அமேதி தொகுதியிலும், மத்திய உள்துறை அமைச்சர் குஜராத் மாநிலம் காந்தி நகரிலும், களமிறக்கப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க | மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை? நாடாளுமன்றத்தில் களமிறக்கத் தயாராகும் பாஜக மாநில தலைவர்


உத்தரபிரதேசத்தில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் 21 இடங்களுக்கான வேட்பாளர் பெயர்களும், மத்தியப் பிரதேசத்தில் 24 இடங்களுக்கான வேட்பாளர் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் இருந்து 15 மக்களவை வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தெலங்கானாவில் 9, கேரளாவில் 12, அசாமில் 11, ஜார்கண்டில் 11, சத்தீஸ்கரில் 11, டெல்லியில் 5 இடங்களுக்கான வேட்பாளர் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் இரண்டு, உத்தரகாண்ட் மூன்று, கோவா-திரிபுரா, அந்தமான் நிக்கோபார்-1 உட்பட 195 வேட்பாளர்கள் பட்டியல் வெளி வந்துள்ளது.


உத்திர பிரதேசத்தில் தொகுதி பங்கீடு


உத்திரபிரதேசத்தில் பாஜக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளான ஆர்எல்டி, அப்னா தளம் (எஸ்), சுபாஎஸ்பி மற்றும் நிஷாத் கட்சிக்கு 6 இடங்களை பாஜக ஒதுக்கியுள்ளது. அதேசமயம், அப்னா தளம் (எஸ்) கட்சிக்கு 2 லோக்சபா இடங்களும், ஆர்எல்டிக்கு 2 லோக்சபா இடங்களும், சுபாஎஸ்பி மற்றும் நிஷாத் கட்சிக்கு தலா 1 லோக்சபா இடங்களும் கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க |  Post Office ஜாக்பாட் திட்டம்: ஒரு முறை முதலீடு, லட்சக்கணக்கில் லாபம், மாதா மாதம் சூப்பர் வருமானம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ