370வது பிரிவை ரத்து செய்த பின்னர் பாஜகவில் 3.8 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை
இந்த ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, முந்தைய அனைத்து சாதனைகளையும் தகர்த்துள்ளது.
புதுடெல்லி: மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், மோடி அரசு எடுத்து வரும் அதிரடி முடிவுகளால் பாரதிய ஜனதா கட்சியில் சேரும் புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, முந்தைய அனைத்து சாதனைகளையும் தகர்த்துள்ளது.
பா.ஜனதா கட்சியின் நிறுவனர் சியாம் பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளான ஜூலை 6-ம் தேதி கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி தொடங்கியது. ஜூலை 6 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெற்ற உறுப்பினர் சேர்ப்பு முகாம் மூலம் சுமார் 3.8 கோடி புதிய உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர். இருப்பினும், இந்த எண்ணிக்கைக் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கட்சியின் தகவல் தொழில்நுட்பக் கிளையால் எண்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் முறையான அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது. புதிய உறுப்பினர்களுக்கான சேர்க்கை நேற்றுடன் முடிவடைந்தது.
அதிக அளவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. இந்த மாநிலத்தில் 2015 இல் பாஜகவில் மொத்தம் 1.8 கோடி உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. மேலும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அல்லது 22.6 லட்சம் அதிகரிக்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை 55 லட்சமாக இருந்திருக்கிறது. அதாவது உ.பியில் சுமார் 1.13 உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளனர்.
சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் டெல்லியில், 15 லட்சம் புதிய உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர்.
ஜம்மு-காஷ்மீரிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் கட்சி நல்ல வெற்றியைக் கண்டடுள்ளது. இந்த மாநிலத்தில் 1 லட்சம் இலக்கை நிர்ணிக்கப்பட்டு உள்ளது. பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் இணைய சேவைகள் தடை செய்யப்பட்டதால், புதிய உறுப்பினர் சேர்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கட்சி நம்புகிறது. இந்த மாநிலத்தில் மட்டும் ஆகஸ்ட் 25 வரை சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாஜகவில் ஹரியானாவில் மொத்தம் 7,14,784 பேர், இமாச்சல பிரதேசத்தில் 4,62,804, பஞ்சாபில் 5,5,422, உத்தரகண்டில் 10 லட்சம், குஜராத்தில் 33.73 லட்சம், கர்நாடகாவில் 16.90 லட்சம், மகாராஷ்டிராவில் 19.97 லட்சம், ராஜஸ்தானில் 20.87 லட்சம் மற்றும் மத்திய பிரதேசத்தில் 24.53 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.