CAA போராட்டங்களுக்கு காங்கிரஸ், AAP கட்சிகளே காரணம் -BJP!
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மக்களிடையே தவறான புரிதலை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ஏற்படுத்தி, போராட்டங்களை தூண்டியிருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது!
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மக்களிடையே தவறான புரிதலை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ஏற்படுத்தி, போராட்டங்களை தூண்டியிருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது!
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) குறித்து தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் டெல்லியில் வன்முறையைத் தூண்டியதற்காக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திங்கள்கிழமை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) மீது அவதூறாக பேசியுள்ளார். மேலும் தேசிய தலைநகரில் வன்முறையைத் தூண்டியதற்காக இரு கட்சிகளும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய ஜவடேகர், காங்கிரசும் ஆம் ஆத்மி கட்சியும் டெல்லி மக்களை தவறாக வழிநடத்தியதுடன், டிசம்பர் 15-ம் தேதி நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) எதிர்ப்பு போராட்டங்களின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்த தூண்டியது என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., “டெல்லி போன்ற அமைதியான நகரத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) குறித்து தவறான தகவல்களைப் பரப்பி, போராட்டங்களை தூண்டி பொது சொத்துக்களை சேதம் செய்த, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியால் நடைப்பெற்றவை. இதற்கு அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வராக இருந்த காலத்தில் டெல்லியின் வளர்ச்சிக்கு உழைக்கத் தவறியதாகவும் ஜவடேகர் குற்றம்சாட்டினார்.
டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் பிப்ரவரியில் நடத்தப்பட உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக டெல்லியில் நடைப்பெற்று வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் டெல்லி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
நகராட்சி நிறுவனங்களை அபிவிருத்திப் பணிகளைச் செய்ய அனுமதிக்காதது மற்றும் தேசிய தலைநகரில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்வதற்குத் தேவையான ரூ.900 கோடியை விடுவிப்பதை நிறுத்தியமைக்காகவும் மத்திய அமைச்சர், முதல்வர் கெஜ்ரிவாலை கண்டித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு சுமார் 4.5 ஆண்டுகள் தூங்கியிருப்பதைக் கண்டு டெல்லி மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள், இப்போது தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே திட்டங்களை வகுத்து வருகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில்., "நகராட்சி நிறுவனங்களின் அபிவிருத்திப் பணிகளின் முயற்சியில் ஆம் ஆத்மி கழுத்தை நெரித்தது, ரூ.900 கோடி வழங்கப்படவில்லை. இன்று, டெல்லியின் மக்கள், ஆம் ஆத்மி கட்சி கடந்த 4.5 ஆண்டுகளாக தூங்கிக்கொண்டு இருப்பதை கண்டு ஆச்சரியப்படுகின்றனர்." என்று குறிப்பிட்டுள்ளார்.