ராய்ப்பூர்: 2019 முதற்க்கட்ட மக்களவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் நக்சலைட் நடத்திய தாக்குதலில் பா.ஜ.க எம்.எல்.ஏ பீமா மாண்டவி மற்றும் நான்கு வீரர்கள் பலியாகி உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுக்குறித்து பேசிய நக்சல் எதிர்ப்பு அமைப்பின் டி.ஐ.ஜி. பி. சுந்தர் ராஜ், தண்டேவாடா பகுதியில் நக்சலைட் நடத்திய சக்திவாய்ந்த IED குண்டு வெடிப்பு தாக்குதலில் பா.ஜ. எம்.எல்.ஏ பீமா உட்பட 5 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் தேர்தல் பிரச்சாரம் முடித்து விட்டு சென்றுகொண்டிருந்தபோது நடத்தப்பட்டது. இதுக்குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது எனக் கூறினார்.


இந்த தாக்குதலை அடுத்து மாநிலத்தின் முதலமைச்சர் பூபக் பாகேல் ராய்பூருக்கு திரும்பி உள்ளார். அங்கு உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.