மேற்கு வங்க வன்முறையை எதிர்த்து குரல் கொடுத்த வானதி சீனிவாசன் கைது
மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சி அதிக இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றிருந்தாலும், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்தி கிராம் தொகுதியில், அவருக்கு எதிராக போட்டியிட்ட பாஜக கட்சி வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சி அதிக இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றிருந்தாலும், ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெட் என்ற கதையாக, முதல்வர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) போட்டியிட்ட நந்தி கிராம் தொகுதியில், அவருக்கு எதிராக போட்டியிட்ட பாஜக கட்சி வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.
இது திரிணமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் ஆத்திரத்தை உண்டாக்கியது. அதன் எதிரொலியாக, திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பாஜக தொண்டர்களை சந்திக்க சென்ற பாஜகவின் தமிழக எம் எல் ஏ வானதி சீனிவாசன், தொண்டர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மேற்கு வங்கத்தில் போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டார்.
ALSO READ | TMC தொண்டர்களால் பற்றி எரியும் வங்காளம்; குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகுமா
எம் எல் ஏவான தனக்கே இந்த கதி என்றால், சாதாரண தொண்டர்கள் நிலை என்ன என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அமைதி போராட்டத்திற்கு கூட மேற்கு வங்கத்தில் அனுமதி இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ | மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறை; அஸ்ஸாமிற்கு தப்பியோடும் பாஜக தொண்டர்கள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR