புது டெல்லி: 2018 டிசம்பர் முதல் நான்கு முக்கியமான மாநிலங்களில் தோல்வியை எதிர்கொண்ட பின்னர் பாரதீய ஜனதா கட்சி (Bharatiya Janata Party) இன்னொரு மாநிலத்தை இழக்க நேரிடும் என்று ஜார்கண்ட் தேர்தலின் (Jharkhand Election) வாக்கு எண்ணிக்கை முடிவு தெளிவான ஒரு செய்தியை காட்டுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாலை 4 மணி நிலவரப்படி பாஜக 26 இடங்களிலும், ஜேஎம்எம் + காங்கிரஸ் கூட்டணி 45 இடங்களிலும் முன்னணியில் உள்ளனர். பாஜகவின் கூட்டணியில் இருந்து பிரிந்த ஆல் ஜார்கண்ட் மாணவர் சங்கம் மூன்று இடங்களில் முன்னிலை வகிக்கிறது, பாபுலால் மராண்டியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் விகாஸ் மொராச்சா நான்கு இடங்களில் முன்னிலை பெற்றுள்ளார். மற்றவர்கள் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளனர். 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற 41 இடங்கள் தேவை.


இது வெறும் முன்னணி விவரம் தான், இன்னும் முழுமையான முடிவுகள் வெளியாக வில்லை என்றாலும், மகாராஷ்டிரா (Maharashtra), சத்தீஸ்கர் (Chhattisgarh), ராஜஸ்தான் (Rajasthan), மத்தியப் பிரதேசத்தின் (Madhya Pradesh) பட்டியலில் ஜார்கண்ட் (Jharkhand) மாநிலமும் சேர்க்கப்படும் என்றே தெரிகிறது. கடந்த 12 மாதங்களில் மீண்டும் ஒரு தோல்வியை சரிசெய்ய பாஜக தவறிவிட்டது.


ஒற்றை கட்சியாக மகாராஷ்டிராவில் வெற்றி பெற்றாலும், அங்கு பாஜக தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்கத் தவறிய நிலையில், ஹரியனாவில் துஷியந்த் சவுதாலா தலைமையிலான ஜேஜேபியுடன் கைகோர்த்த பின்னர் ஆட்சி அமைக்க முடிந்தது.


ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில், பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி இருந்தது. இந்த அனைத்து மாநிலங்களிலும் பாஜகவை சொந்த பலத்தில் தோற்கடிப்பதில் காங்கிரஸ் வெற்றி பெற்றது ஆச்சரியமாக இருந்தது. இதே வருடத்தில் மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 300+ இடங்களுக்கு அதிகமாக வெற்றி பெற்ற போதிலும், மாநிலத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி, கட்சிக்கு மாநில அளவில் தலைவர்கள் இல்லை என்பதையும், பிரதமர் நரேந்திர மோடியின் அலை, மாநிலத் தேர்தலில் கட்சி பயணிக்க உதவ போதுமானதாக இல்லை என்பதையும் காட்டுகிறது.


ஜார்க்கண்டில் பாஜகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, மாநில முதல்வராக ஆதிக்கம் செலுத்த ஒரு பழங்குடியினர் அல்லாதவரை நியமிக்க கட்சி எடுத்த முடிவு தான் என்பதைக் காட்டுகிறது. கூட்டணியில் இருந்து ஏ.ஜே.எஸ்.யு பிரிந்து செல்வதற்கான பாஜகவின் நடவடிக்கை கட்சிக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. 370 வது பிரிவு, தேசியவாதம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற தேசிய பிரச்சினைகளை பாஜக அதிகமாக நம்பியிருப்பது. ஆனால் அது அங்கு வேலை செய்யவில்லை. ஏனெனில் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் உள்ளூர் பிரச்சினைகள் குறித்து அதிகம் பேசிய ஜே.எம்.எம்-காங்கிரஸ்-ஆர்.ஜே.டி கூட்டணிக்கு வாக்களிப்பதில் அதிக அக்கறை காட்டினர்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.