முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காக SC, ST, OBC உரிமைகளைப் பறிக்க காங்கிரஸ் முயற்சி -ஜே.பி. நட்டா
BJP vs Congress, Lok Sabha Election 2024: எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களை காங்கிரஸ் வெறுக்கிறது என்றும் குற்றம் சாட்டிய நட்டா, முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காக எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசிக்களின் உரிமைகளைப் பறிக்க காங்கிரஸ் முயல்வதாக குற்றம் சாட்டினார்.
BJP President JP Nadda: ஓபிசி சமூக மக்களின் உரிமைகளைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. மேலும் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களை காங்கிரஸ் வெறுக்கிறது. அவர்களின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் நினைக்கிறது என பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கடுமையாகத் தாக்கி பேசினார்.
பாஜக தேசியத் தலைவர் தலைவர் நட்டா தனது வீடியோ செய்தி ஒன்றில், "இது காங்கிரஸின் மறைமுகமான செயல்திட்டமே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் தெரிகிறது. நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கு தான் முதல் உரிமை உண்டு என்று காங்கிரஸ் சொல்கிறது. அதே நேரத்தில் நாட்டின் வளங்களில் ஏழைகளுக்கு முதல் உரிமை உண்டு என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். இதற்கு ஆதாரமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2009 இல் அளித்த அறிக்கையை நட்டா மேற்கோள் காட்டினார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2009-ல் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், நாட்டில் உள்ள வளங்களில் அவர்களுக்கு முதல் உரிமை கொடுக்க வேண்டும் என வேண்டுமென்றே கூறியதாக நட்டா கூறினார்.
எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களை காங்கிரஸ் வெறுக்கிறது என்றும் குற்றம் சாட்டிய நட்டா, 'ஏனென்றால், நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களாக இவர்கள் இருக்கிறார்கள்' என்றார்.
காங்கிரஸின் யுபிஏ (UPA) அரசாங்கத்தின் போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், 2006 டிசம்பரில் தேசிய வளர்ச்சிக் கவுன்சிலில் உரையாற்றியபோது, சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினருக்கு சமமான பங்களிப்பை உறுதி செய்ய புதுமையான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கூறினார். வளர்ச்சியின் பலன்களை திறம்பட பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் ர்ணவும் கூறினார். இதற்குப் பிறகு, 2009-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மும்பையில் செய்தியாளர் சந்திப்பின்போது மீண்டும் அதேகூற்றை வெளிப்படுத்தினார்.
2014 தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் இதே கருத்தை கூறியது. தற்போது 2024 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் மீண்டும் அதே கருத்தை கிகூறியுள்ளது காங்கிரஸ் என்றும் பாஜக தேசியத் தலைவர் கூறினார்.
கர்நாடகாவில் பாஜக அரசு மத அடிப்படையை ஒழித்தது. ஆனால் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லீம்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. நாட்டில் பெரும்பான்மைவாதத்திற்கு இடமில்லை என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
அதாவது பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினரை காங்கிரஸ் எந்தளவுக்கு வெறுக்கிறது என்பதை காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மூலம் தெளிவாக்கியுள்ளது எனக் கூறினார்.
தலித்துகளை விட முஸ்லிம்களின் நிலை மோசமாக உள்ளது என்று சச்சார் கமிட்டி அறிக்கை மூலம் காங்கிரஸ் கூற முயற்சித்துள்ளது என்று பாஜக தேசிய தலைவர் காங்கிரஸை கடுமையாக சாடினார். இதற்கான பின்னணி நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்தது. பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளைப் பறிக்கும் காங்கிரஸின் இந்தப் பழக்கம் மிகவும் பழமையானது என்றார்.
மேலும் படிக்க - ‘பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்’ நேரில் சந்திக்க தயார்.. பிரதமருக்கு கார்கே கடிதம்
பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கரின் உரையை உதாரணமாகக் காட்டி பேசிய நட்டா, "கடந்த 20 ஆண்டுகளில் பண்டித ஜவஹர்லால் நேரு 2000 உரைகளை ஆற்றியுள்ளார். ஆனால் ஒருமுறை கூட அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நலன் குறித்துப் பேசிவில்லை என 1951-ல் பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் கூறியதாக மேற்கோள்காட்டி பேசினார்.
பண்டித ஜவஹர்லால் நேரு எப்போதுமே முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே இருந்தார். நாட்டில் முஸ்லீம்கள் புறக்கணிக்கப்படுவதை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் விரும்புவதில்லை. ஆனால் சமூக பாதுகாப்பு தேவைப்படும் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசியினரின் உரிமைகளைப் பறித்து ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை திருப்திப்படுத்தக்கூடாது என்று அவர் கூறினார்.
தேசிய மத மற்றும் மொழி சிறுபான்மையினர் ஆணையத்தை அமைத்து முஸ்லிம்களை சாதிகளாக பிரிக்க காங்கிரஸ் சதி செய்ததாக பாஜக தலைவர் குற்றத் சாட்டினார்.
யாரேனும் இஸ்லாம் மதத்திற்கு மாறினால், அவருடைய பட்டியல் சாதி அந்தஸ்து அப்படியே இருக்க வேண்டும் என்றும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில், முஸ்லிம்களுக்கு 6 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் சதி செய்தது என அடுக்கடுக்கான கடுமையான குற்றசாட்டை முன்வைத்தார்.
மேலும் படிக்க - ஓபிசி இடஒதுக்கீட்டை பறிக்க காங்கிரஸ் நாற்காலிக்காக துடிக்கிறது -பிரதமர் மோடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ