புதுடெல்லி: லடாக்கில் (Ladakh) உள்ள பாங்காங் ஏரியின் (Pangong Lake)  தென் கரையில் ஏற்பட்ட கண்ணிவெடி குண்டுவெடிப்பில் உயிரை இழந்த திபெத்தை சேர்ந்த சிறப்பு எல்லைப் படை வீரர்  நைமா டென்சினுக்கு (Nyima Tenzin) இந்திய ராணுவம் திபெத்திய சமூக உறுப்பினர்களுடன் இணைந்து திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தியது. அவரது இறுதிச் சடங்கில் பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் கலந்து கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் மூலம் இந்தியா சீனாவிற்கு உறுதியான செய்தியை கொடுத்துள்ளது.


டென்சின் திபெத்திய அகதி சமூகத்தில் உறுப்பினராக இருந்தார்.  அவருக்கு லடாக்கில்  பலர் திரண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.


இறுதி ஊர்வலத்தின் போது “பாரத் மாதா கி ஜெய்”, “ஜெய் திபெத்” மற்றும் “விகாஸ் ரெஜிமென்ட் ஜிந்தாபாத்” கோஷங்கள் எதிரொலித்தன. திபெத்திய கொடிகளை அசைத்து, மலர் வளையம் வைத்து தியாக வீரருக்கு பாஜக தலைவர் ராம் மாதவ் இறுதி அஞ்சலி செலுத்தினார்


லடாக்கில் வீர மரணம் அடைந்த திபெத் வீரரில் இறுதி சடங்கில் கலந்து கொண்டு, இந்தியா சீனாவிற்கு உறுதியான செய்தியை கொடுத்துள்ளது.


மேலும் படிக்க | கொரோனாவை வென்றதா வுஹான்.... உண்மை நிலவரம் என்ன..!!!


கடந்த வார இறுதியில் ஒரு ராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட வீரர் டென்சி இன்று காலை முழு இராணுவ மரியாதைகளுடன் லேயில் அடக்கம் செய்யப்பட்டார். அவர் ஒரு திபெத்தியர்.


திபெத்தை சீனா தனது நாட்டை சேர்ந்த ஒரு பகுதியாக கருதுகிறது.


கடந்த வாரம் கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் ஏரியின் தெற்கு கரையில் இந்திய இராணுவம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையின் போது டென்ஜின் தனது உயிரைத் தியாகம் செய்தார். இந்த ராணுவ நடவடிக்கையின் போது, ​​மற்றொரு ஜூனியர் சிப்பாய் டென்சின் லோடன், 24,  படுகாயமடைந்து, தற்போது லடாக்கில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த டென்சின் லோடனும் திபெத்தை  சேர்ந்தவர்.


மேலும் படிக்க | பாகிஸ்தானில் கொரோனா தொற்று திடீரென சரிந்ததன் ’மர்ம’ பின்னணி என்ன..!!!