பி.ஜே.பி எவ்வளவு அதிகமான அழுத்தத்தை கொடுத்தாலும், எங்களை ஒன்னும் செய்ய முடியாது என கர்நாடகா முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகவில் மதசார்பற்ற ஜனதா தளம் + காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணைய போவதாகவும், அதனால் தான்  இந்த 3 எம்எல்ஏ-க்களும் மும்பை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் சில அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எம்.ஏ.க்களை தங்கள் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதனையடுத்து காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய கர்நாடகா மாநில துணை முதலமைச்சருமான பரமேஸ்வரா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏ-க்கள் குறித்த வெளியான செய்தி உண்மை இல்லை. அந்த மூன்று பேரும் சொந்த காரணங்களுக்காக மும்பை சென்றிருக்கலாம் எனக் கூறினார்.


இதுக்குறித்து பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, மும்பை சென்றுள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏ-க்கள் எங்கள் தொடர்பில் தான் இருக்கிறார்கள். அவர்கள் எங்களிடம் கூறிவிட்டு தான் மும்பை சென்றனர். அதனால் எங்கள் ஆட்சிக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. எனக்கு தெரியும் எங்கள் எம்எல்ஏ-க்களை பாஜக விலைக்கு வாங்க பார்க்கிறது. இதுக்குறித்து பீதியடைய தேவையில்லை. எங்கள் கூட்டணி ஆட்சி தொடரும். இந்த அரசாங்கத்தை எப்படி வழிநடத்தி செல்வது எனபது எனக்கு தெரியும். எனவே இதுக்குறித்து ஊடகங்கள் கவலைப்பட வேண்டியதில்லை." எனக் கூறினார்.