பாஜக-வின் கடைசி பட்ஜெட்: கடவுளுக்கு நன்றி தெரிவித்த ராகுல்!!
2018-19ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
2018-19ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த பட்ஜெட் ஏழைகளுக்கான பட்ஜெட், மக்களுக்கான பட்ஜெட் என்று ஆளும் பாஜக அரசும், பிரதமர் மோடியும் கூறி வருகின்றனர்.
மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியதாவது:-
நான்கு ஆண்டுகள் கடந்தும் இன்னும் விவசாயிகளுக்கு நியாமன விலை கிடைக்க செய்வோம் என உறுதி தான் உள்ளது.
நான்கு ஆண்டுகள் கடந்தும் கற்பனையான திட்டங்கள் பொருந்தாத பட்ஜெட்டாக உள்ளது அதிர்ஷ்டவசமாக இன்னும் ஒருவருடம் தான் இருக்கிறது என்றார்.