மும்பை: கடந்த வாரம் மாயமான HDFC வங்கி துணை தலைவர் சித்தார்த் சான்கிவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவம் தொடர்பாக 20-வயது மதிக்கதக்க வாளிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவரது பெயர் சர்பார்ஸ் ஷெயிக் எனவும், இவரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துளனர்.


39-வயதாகும் சித்தார்த் சான்கிவி கடந்தவாரம் புதன் அன்று மும்பை கமலா மில்ஸ் பகுதியில் மாயமானதாக தகவல்கள் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையில் இறங்கிய NM ஜோஷி மார்க் காவல்துறையினர் அடுத்த தினமே நவி மும்பையின் கோபர் கேயிரைன் பகுதியில் அவரது காரினை மீட்டனர். இதைத்தொடர்ந்து தீவிர விசாரணையில் காவல்துறையினர் ஈடுப்பட்டனர்.


இந்நிலையில் தற்போது இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் சர்பார்ஸ் ஷெயிக் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் ஷெயிக் வசம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சித்தார்த்-னை கொலை செய்து மும்பையில் புதைத்துவிட்டு அவரது காரினை மட்டும் நவி மும்பைக்கு கொண்டு வந்திருக்கலாம் என அறிந்துள்ளனர்.


இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளில் ஷெயிக் ஒருவர் தான் எனவும், மற்ற 3 நபர்களை தேடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!