உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைகழகம் மாணவர்களுக்கு வழங்கிய மதிப்பெண் சான்றிதழில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஆகியோரின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதைக்கண்டு மாணவர்களின்  இடையே பரபரப்பு ஏற்ப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் டாக்டர் கிரிஜா சங்கர் கூறுகையில், இவ்விவகாரம் பற்றிய எந்த புகாரும் பெறப்படவில்லை, இவ்விவகாரம் எங்களுடைய பார்வைக்கு கொண்டுவரப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 


மேலும், மதிப்பெண் சான்றிதழில் மாணவரின் பதிவு எண் சரியாக உள்ளது. ஆனால், புகைப்படம் மட்டும் சல்மான் கானின் படம் உள்ளது. இதில் பல்கலைக்கழகத்தின் தவறு கிடையாது என்று மறுத்து பேசினார்.  அவர் எங்கள் தரப்பு ஆவணங்கள் அனைத்தும் சரியாகவே உள்ளது என கூறினார்.  


புகைப்படத்தை ஒட்டி மாணவர்கள் விண்ணப்பத்தை சமர்பிப்பார்கள், அவற்றை கல்லூரி முதல்வர் சரிபார்த்து எங்களுக்கு அனுப்புவார், அதனை கண்காணிப்பார்கள் பார்வையிடுவார் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.