நீண்ட காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் சசி கபூர் இன்று மும்பை கோகிலாபென் அம்பானிய மருத்துவமனையில் நேற்று திடீர்ரென காலமானார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

79 வயதான அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நேற்று மாலை 5.20 மணியளவில் காலமானார் .


சினிமா துறையில் தனது இணையில்லா பங்களிப்பிற்காக 2011-ஆம் ஆண்டு, சஷி கபூர் பத்ம பூஷன் விருது பெற்றார். 
2014-ஆம் ஆண்டில் அவருக்கு தாதாசாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது.


தேவார் (1974), கபி கபி (1975), சத்யம் சிவாம் சுந்தரம் (1977), சில்சீலா (1981) மற்றும் நாமக் ஹலால் (1982) போன்ற படங்கள் அவருக்கு பெரும் பெயர் வாங்கித் தந்த படங்களாகும்.
திரையுலகில் கொடிக்கட்டி பறந்த இவருக்கு கரண் கபூர், குணால் கபூர் மற்றும் சஞ்சனா கபூர் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.


இதை தொடர்ந்து தற்போது, இன்று மாலை நான்கு மணிக்கு சசி கபூர்ரின் இறுதி ஊர்வலம் மூன்று துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய இறுதி ஊர்வலத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், நடிகர்களும் இரங்கல் தெரிவித்தினர்.