Bomb Threat: பெங்களூருவில் உள்ள 20 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Bomb Threat In Bengaluru School: பெங்களூருவில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பள்ளி நிர்வாகம்.
Kannada News In Tamil: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெங்களூருவில் உள்ள 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது, பெறும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் அளித்த தகவலில், பெங்களூருவில் உள்ள 20 பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இந்த மின்னஞ்சலில் பள்ளி வளாகத்தில் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேகத்திற்கிடமான பொருள் ஏதும் பள்ளி வளாகத்தில் பதுக்கி வைத்திருகிறதா என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் பள்ளிகளில் சோதனை நடத்தினர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டு செயலிழப்பு படையினரும் சோதனை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் புரளியாக இருக்கலாம் -காவல்துறை ஆணையர்
இந்த சம்பவம் குறித்து பேசிய பெங்களூரு நகர காவல்துறை ஆணையர் பி தயானந்தா, இந்த மிரட்டல் ஒரு புரளி என்று கூறியுள்ளார். பெங்களூரு நகரில் உள்ள சில பள்ளிகளுக்கு இன்று காலை ‘வெடிகுண்டு மிரட்டல்’ மின்னஞ்சல்கள் வந்துள்ளன. பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு இருக்கிறதா என கண்டறிதல் குழுக்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளன. இந்த வெடிகுண்டு மிரட்டல் வதந்தி போல் தெரிகிறது. இருப்பினும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிய பள்ளி நிர்வாகம்
வைட்ஃபீல்ட், கோரமங்களா, பசவேஷ்நகர், யலஹங்கா மற்றும் சதாசிவ்நகர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த அச்சுறுத்தலை அடுத்து, பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது. அதில் நமது பாடசாலையில் முன்னெப்போதும் இல்லாத ஒரு சூழலை இன்று நாம் எதிர்கொண்டுள்ளோம். உறுதிப்படுத்தப்படாத ஆதாரங்கள் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த தகவல் பள்ளிக்கு கிடைத்துள்ளது. இதன் காரணமாக குழந்தைகளின் பாதுகாப்பு தான் முக்கியத்துவம் என்பதால், மாணவர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம் என பள்ளி நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க - 13,000 நிர்வாண புகைப்படங்கள்... காதலி அதிர்ச்சி.. இளைஞரை கைது செய்த போலீஸ்!
பெற்றோர்கள் பீதியடைய தேவையில்லை -முதல்வர் சித்தராமையா
இது குறித்து விசாரணை நடத்துமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் கூறுகையில், "பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, பெற்றோர்கள் பீதியடைய தேவையில்லை. பள்ளிகளை ஆய்வு செய்து பாதுகாப்பை அதிகரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். காவல் துறையிடம் இருந்து முதற்கட்ட அறிக்கை பெறப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டும் வெடிகுண்டு மிரட்டல்
கடந்த ஆண்டு பெங்களூருவில் உள்ள 7 பள்ளிகளுக்கு இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக போலீசார் தெரிவித்தனர். சோதனைக்கு பிறகு அது வதந்தி எனத் தெரியவந்தது என பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க - ஒரே அடியில் கணவனை கொலை செய்த மனைவி! நாட்டையே உலுக்கிய கொடூரம்! முழுப் பின்னணி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ