எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் இரண்டாவது நாளாக இன்றும் முடங்கியுள்ளது. மக்களவை காலையில் தொடங்கியதும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கி முறைகேடுகள் குறித்து பிரதமர் பதிலளிக்கவேண்டும் என வலியுறுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நடந்து கொள்வது குறித்து இதுவரை விவாதிக்க வில்லை. மேலும் கார்த்தி சிதம்பரம் கைது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு பழிவாங்கும் போக்கை கடைப்பிடிப்பதாக காங்கிரஸ் கட்சி பிரச்னை எழுப்ப திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


ஆனால் இதற்கு அனுமதி வழங்கப்படாததால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இருக்கையை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். 


பஞ்சாப் வங்கி மோசடி பிரச்சனையால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. இதே பிரச்சனை மாநிலங்களவையிலும் எதிரொலித்து அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. 



பஞ்சாப் வங்கி மோசடி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோருதல் மற்றும் காவிரி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் எழுப்பினர். இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடர்ந்து முடங்கி வருவது குறிப்பிடத்தக்கது.