ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கேஃபே காபி டேவில் கர்ப்பான்பூச்சி இருப்பதை சுட்டி காட்டி வீடியோ எடுத்தவரை கடையின் பெண் ஊழியர் கன்னத்தில் அறைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெய்ப்பூரில் உள்ள கேஃபே காபி டேவுக்கு அர்ப்பன் வர்மா என்ற சட்டக்கல்லூரி மாணவர் சென்றுள்ளார். அங்கிருந்த பிரிட்ஜின் உள்ளே கரப்பான்பூச்சிகள் இருப்பதை பார்த்த அர்ப்பன், கடை ஊழியரிடம் தெரிவித்துள்ளார்.


ஆனால் அர்ப்பன் கூறுவதை யாரும் கேட்காமல் கடை ஊழியர்கள் இருந்துள்ளனர். அதனால், அர்ப்பன் தன் மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். அதை பார்த்த அக்கடை பெண் ஊழியர் அர்ப்பனின் கன்னத்தில் அறைந்த்தார்.


இதையடுத்து, அர்ப்பன் தான் பிடித்த வீடியோவை, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.