புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) திங்கள்கிழமை பின்னிரவில் டெல்லியின் எய்ம்ஸில் (AIIMS) அனுமதிக்கப்பட்டார். எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின் படி மருத்துவர்கள் அவரை பரிசோதித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி, கொரோனா வைரஸுக்கு எதிர்மறையையாக ஷா பரிசோதித்தார். உள்துறை அமைச்சருக்கு ஆகஸ்ட் 2 ம் தேதி கோவிட் -19 இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி குருகிராமின் மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஷா சமூக ஊடகங்களில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகக் கூறியிருந்தார்.


"எனது உடல்நிலை நன்றாக உள்ளது, ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டு தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கோருகிறேன்" என்று அமித் ஷா முன்பு கூறியிருந்தார்.


பின்னர் சில நாட்களில் அவர் கொரோனா வைரசுக்கு எதிர்மறையாக சோதிக்கப்பட்டார்.


"இன்று எனது கொரோனா வைரஸ் சோதனை அறிக்கை எதிர்மறையாக வந்துள்ளது. எனக்கும் எனது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் கடவுளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அமித் ஷா ட்வீட் செய்திருந்தார்.



டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் இன்னும் சில நாட்கள் வீட்டில் தனிமையில் இருப்பேன் என்று அவர் கூறியிருந்தார்.


ALSO READ: கொரோனா நோய்தொற்றில் இருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைந்தார்


மற்றொரு ட்வீட்டில், தனக்கு சிகிச்சையளித்த மற்றும் தன்னை கவனித்துக்கொண்டதற்காக உள்துறை அமைச்சர் மேதாந்தா மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.


 இந்நிலையில், நேற்று இரவு அவர் உடல் நிலை பாதிக்கப்படவே அவர் இன்று அதிகாலை தில்லியின் AIIMS-ல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.