அயோத்தி ராமர் கோவிலில் பணியில் இருந்த ஜவானுக்கு AK 47 துப்பாக்கிக் காயம்! காரணம் என்ன?
Accident In Ayodhya Ram Temple Complex : அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் நடந்த விபத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட பிஏசி ஜவானுக்கு காயம் ஏற்பட்டது...
அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் இன்று நடந்த சோகமான சம்பவத்தில், கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட பிஏசி ஜவான் ஒருவருக்கு துப்பாக்கிக் காயம் ஏற்பட்டது. மாகாண ஆயுதக் காவலர் (பிஏசி) ஜவான் மர்மமான சூழ்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தார். காயமடைந்த ஜவான் ராம் பிரசாத், சிகிச்சைக்காக லக்னோ ட்ராமா சென்டருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டா ஜவானின் மார்பில் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக தெரிகிறது என அயோத்தி ரேஞ்ச் ஐஜி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஏகே 47 தோட்டாவால் ஜவான் ஒருவர் மார்பில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி கவலைகளை அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அயோத்தி ராமர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவருக்கு காயம் ஏற்படுத்திய தோட்டா, அவரது சொந்த ஆயுதத்தில் இருந்து வெளியானதா அல்லது மற்றொரு ஜவானின் துப்பாக்கியில் இருந்து வெளியானதா என்பது குறித்து சரியான தகவல்கள் தெரியவில்லை.
மேலும் படிக்க | எச்சரிக்கை! காலை உணவை மிஸ் பண்ணவே கூடாது... காரணங்கள் இதோ..!!
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். விசாரணை முடிந்த பின்னரே துல்லியமான காரணம் கண்டறியப்படும் என்று அவர் வலியுறுத்தினார். 53 வயதான ராம் பிரசாத், ஸ்ரீ ராம் ஜென்மபூமி வளாகத்தின் வளாகத்தில் பணியில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக நெஞ்சில் குண்டு பாய்ந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
துப்பாக்கியால் ஒருவர் காயமடைந்த உடனே, சக ஊழியர்கள் உதவியுடன், காயமடைந்த ஜவான், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து, அவரைப் பரிசோதித்த மருத்துவ வல்லுநர்கள், உயிர்காக்கும் கருவிகளுடன் ஜவானை லக்னோ ட்ராமா சென்டருக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த ஜவான் அமேதியைச் சேர்ந்தவர், அவரது குடும்பம் லக்னோவில் வசித்து வருவதாக தெரிய வந்துள்ளறது. அவர் 32வது கார்ப்ஸ் பிஏசியில் பணியாற்றி வந்தார். தற்போது கிடைக்கக்கூடிய தகவல்களின்படி, துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியாகி ஒருவரின் நெஞ்சில் பாய்ந்த சம்பவத்தின் போது கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சக இராணுவத்தினரையும் அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
மேலும் படிக்க | தென் சீனக் கடல் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ