கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் பெரும் பலத்தைச் சேர்த்துள்ளது என்றால் மிகையாகாது. கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, ஒமிக்ரான் அலையில் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லாமல் இந்தியா தப்பித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடு பணி 2021 ஜனவரி 16ம் தேதி தொடங்கிய நிலையில், இந்தியாவில், இதுவரை  மொத்தம் 180 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை நேற்று தெரிவித்தது. 


இதில் 96.70 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 86.21 கோடி பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட  2.12 கோடிக்கும் அதிகமானோருக்கு  பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது 


மேலும் படிக்க | தடுப்பூசி இயக்கத்தில் பங்காற்றிய அனைவரையும் வணங்குகிறேன்: பிரதமர் மோடி


இந்நிலையில், 12-14 வயதுடையவர்களுக்கு COVID-19 தடுப்பூசி மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 'முன் எச்சரிக்கை டோஸ்'  என்னும் பூஸ்டர் டோஸ் மார்ச் 16 முதல் தொடங்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். “மருத்துவ அமைப்புகளுடன்  நடத்தப்பட்ட உரிய ஆலோசனைக்குப் பிறகு, 12-13 வயது மற்றும் 13-14 வயதுக்குட்பட்டவர்களுக்கு (2008, 2009 மற்றும் 2010 இல் பிறந்தவர்கள். அதாவது ஏற்கனவே 12 வயது நிரம்பியவர்கள்) COVID-19 தடுப்பூசி வழங்கும் பணியை, மார்ச் 16, 2022 முதல் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 


முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் பூஸ்டர் டோஸ் பெற, வேறு வித நோய் அல்லது உடல் பிரச்சனை இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை  நீக்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதாவது, இனி 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய எவரும் தடுப்பூசி பெறலாம். 


எனவே, மார்ச் 16, 2022 முதல், 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களும் கோவிட் 19 தடுப்பூசியின் முன்னெச்சரிக்கை டோஸ் அல்லது பூஸ்டர் டோஸுக்கு தகுதி பெறுவார்கள்” என்று அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR