பீகார் பாலம் விபத்து அம்பலம்! 5 ஆண்டுகளாக யாருக்காக காத்துக் கொண்டிருந்தது பாலம்?
Bihar Bridge Collopsed: 14 கோடி செலவில் கண்டக் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்தது... ஐந்தாண்டுகளாக ஏன் திறப்புவிழா நடத்தப்படவில்லை
பெகுசராய்: 14 கோடி செலவில் கண்டக் பகுதியில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்தது. கந்தக்கில் பகுதியில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை (டிசம்பர் 18, ஞாயிற்றுக்கிழமை) பாலம் இடிந்து விழுந்தது குறித்த தகவல் கிடைத்ததும் பல்லியா எஸ்டிஓ ரோஹித் குமார், எஸ்டிபிஓ குமார் வீர் திரேந்திரா, சிஓ சதீஷ்குமார் சிங், சிஐ அகிலேஷ் ராம் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
கந்தக் ஆற்றில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே உடைந்தது
பீகாரில் தலைவிரித்தாடும் ஊழல் விஷயத்தை பாலம் உடைந்த சம்பவம் அம்பலமாக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பாலத்தைக் கட்டிக் கொண்டிருந்த கட்டுமான நிறுவனம் விரைவில் திறப்பு விழா நடத்தி பொதுமக்களின் புழக்கத்திற்காக திறந்துவிட இருந்த நிலையில், திறப்பு விழாவுக்கு முன்பே பாலம் இடிந்து விழுந்துள்ளது.
இந்த பாலத்தின் பகுதி முழுவதும் உடைந்து ஆற்றில் விழுந்துள்ளது. 206 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம் முதலமைச்சர் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. தற்போது இந்த பாலம் முழுவதும் உடைந்து ஆற்றில் மூழ்கியது.
மேலும் படிக்க | Viral News: 2 வயது சிறுவனை விழுங்கிய பின் வெளியில் துப்பிய நீர் யானை!
பாலம் கட்டும் பணி முடிந்து விட்டதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். இந்த பாலம் இன்னும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்ட பிறகு, இதுபோன்ற அசம்பாவிதம் நடந்திருந்தால், சேதம் அதிகமாக இருந்திருக்கும்.
கண்டக் நதியின் மீது பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இது தொடர்பாக, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள், சாலை போராட்டங்கள் முதல் சட்டசபை வரை தங்கள் கோரிக்கையை வலுவாக எழுப்பினர். 2012-13ம் ஆண்டு, பாலம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும் படிக்க | நாய் மீது தேசிய கொடி போர்த்தி அவமரியாதை... தேனியில் ஷாக்!
விரிசல் ஏற்பட்டதை அடுத்து பொறியாளர்கள் குழு வரவழைக்கப்பட்டது
கடந்த மூன்று நாட்களுக்கு முன் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பாலத்தை ஆய்வு செய்ய பொறியாளர்கள் குழு ஒன்றும் சனிக்கிழமை வரவழைக்கப்பட்டது. பொறியாளர்களும் பாலத்தை காப்பாற்ற சில ஆலோசனைகளை வழங்கினர், ஆனால் இந்த பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவதற்கு முன்பே, பாலம் இடிந்து விழுந்தது.
இந்த பாலத்தின் கட்டுமானப் பணியை பிப்ரவரி 23, 2016 அன்று தொடங்கி 2017 ஆகஸ்ட் 22க்குள் ஒரு வருடத்தில் முடித்தது, ஆனால் இந்த பாலம் ஐந்தாண்டுகளாக திறப்பு விழாவிற்காக காத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கலிகாலம் முத்தி போச்சு! திருமணத்தில் காதலனை இறுக்க அணைச்சு உம்மா கொடுத்த மணப்பெண்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ