கலிகாலம் முத்தி போச்சு! திருமணத்தில் காதலனை இறுக்க அணைச்சு உம்மா கொடுத்த மணப்பெண்!

Bride Viral Video With Lover: கலிகாலம் முத்திப்போச்சு என்று பலரும் ஆதங்கப்படும் மணமகளின் கட்டிப்பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 18, 2022, 01:33 PM IST
  • காதலனை கட்டிப்பிடித்து அட்டகாசம் செய்த மணப்பெண்!
  • கோபத்தில் வெளியேறிய மணமகன்
  • கலிகாலம் முத்திப் போச்சு என்று பொங்கும் குடும்பத்தினர்
கலிகாலம் முத்தி போச்சு! திருமணத்தில் காதலனை இறுக்க அணைச்சு உம்மா கொடுத்த மணப்பெண்! title=

கல்யாணப் பெண்ணின் முத்த வீடியோ: திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் முக்கியமான தருணம் என்பதை அனைவரும் ஒத்துக் கொள்வார்கள். திருமண வாழ்க்கை சிலருக்கு இனிப்பாக அமைவதும், சிலரும் கசப்பாக அமைவதும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் துணையை பொறுத்தது தான்.  பலருக்கும் தங்களது திருமணம் எப்படியெல்லாம் நடக்கவேண்டும் என்பது பற்றிய சில கனவுகள் இருக்கும், சிலருக்கு அது கைகூடும் சிலருக்கு அது வெறும் கனவாக மட்டுமே போய்விடும். 

பல கனவுகளும், ஆசைகளும் சுமந்து அடியெடுத்து வைக்கும் இந்த திருமண நாளில் நடைபெறும் சம்பவங்களில் சில வினோதமானதாக இருந்தால், பல சுவாரஸ்யமானதாக இருந்து, அனைவரின் கவன ஈர்ப்பை பெற்றுவிடுகிறது. பொதுவாகவே, திருமணத்தில் நடக்கும் விசயங்கள் பசுமரத்தாணி போல மனதில் தங்கிவிடும். அது நல்லதா இல்லை துன்பத்தைத் தரக்கூடியதா என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும்.

அப்படி ஒரு வித்தியாசமான சம்பவத்தில் திருமண நிகழ்ச்சியில், மணப்பெண் செய்த செயல், அடிவயிற்றில் தீயை பற்ற வைத்தது போல நடந்து, இணையத்தில் அந்த வீடியோ வைரலாகிறது, அந்த காட்சி இணையத்தில் பகிரப்பட்டு பலரின் முகத்தையும் சுளிக்க வைக்கிறது.

மேலும் படிக்க | மணமேடையில் லிப் லாக் கொடுத்த மணப்பெண்! வேதனையில் 90's கிட்ஸ்!

திருமணத்தில், மணமகனை விட்டு விட்டு, மணமகள் வேறு ஒருவருடன் ஜாலியாக டான்ஸ் ஆடி, அவரை கட்டிப்பிடித்துக் கொண்டால், மணமகன் அந்த இடத்தில் எப்படி நடந்துக் கொள்வார்?

வைரலாகும் இந்த வீடியோவில், பிரியாவிடை கொடுக்கும் பெண் அழைப்பு நிகழ்ச்சியில், மணமகளின் காதலன் அந்த இடத்துக்கு வருகிறார். அப்போது நான் இதுவரை பார்த்ததே இல்லை என்று சொல்லக்கூடிய டான்சும், கட்டுப்பிடி சம்பவமும் நடைபெறுகிறது. வைரலாகும் வீடியோ இதுதான்...

மணமகள், புகுந்த வீட்டிற்கு புறப்படுவதற்கு சற்று முன்பு, அவரது காதலன் அந்த இடத்துக்கு வருகிறார்.

மேலும் படிக்க | Viral News: 2 வயது சிறுவனை விழுங்கிய பின் வெளியில் துப்பிய நீர் யானை!

மாப்பிள்ளையை அதிரவைக்கும் அளவுக்கு காதலனுடன் சேர்ந்து நடனமாடும் மணமகள் காதலனை கட்டிப்பிடித்துக் கொண்டு விலகவே இல்லை. சில விநாடிகள் பொறுத்துப் பார்த்த ஒரு பெண்மணி, கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பவர்களை பிரித்து விட முயற்ச்சிக்கிறார்.  

இந்தக் காட்சியைப் பார்த்த மாப்பிள்ளைக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. ஆனால், இந்த வீடியோவைப் பார்க்கும் பல கேள்விகள் எழுகின்றன. வெறும் வேடிக்கைக்காக உருவாக்கப்பட்ட வீடியோவா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், வைரலாகும் இந்த வீடியோ பலரின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த வீடியோ @JaikyYadav16 என்ற ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. கலிகாலம் முத்திப்போச்சு என்று பலரும் இந்த வீடியோவுக்கு கமெண்ட் போட்டுள்ளனர்.

மேலும் படிக்க | Viral Video: என்னடா இது வீரனுக்கு வந்த சோதனை... சிங்கத்தை பந்தாடும் எருமைகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News