கர்நாடக அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பத்தினால் குருகிராம்மில் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த பாஜக எம்எல்ஏக்களை திரும்பி வரும்படி எடியூரப்பா அழைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.


 



 


இந்நிலையில், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் திரும்ப பெற்றனர். மேலும் பாஜக, தனது எம்எல்ஏக்களை குருகிராமத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைத்தது. இதற்காக காங்., எம்எல்ஏ.,க்களுடன் பாஜக பேரம் பேசி வருவதாகவும் காங் மற்றும் மஜத கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. 


இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் பேரம் பேசுவதை தடுக்க கர்நாடக பாஜக எம்எல்ஏ.,க்கள் ஹரியானா மாநிலம் குருகிராம்மில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கிடையில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ.,க்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் 4 காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் பேர் பங்கேற்கவில்லை. 


இதனையடுத்து குருகிராமில் தங்க உள்ள பாஜக எம்எல்ஏ.,க்கள் பெங்களுரு திரும்பி வர அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.