ஆர்சிபியை வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்... உச்சக்கட்ட குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் - 'மீம்ஸ் படையல்'

2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி நேற்று ராஜஸ்தான் அணியிடம் தோற்று வெளியேறியது. இதை தொடர்ந்து, சிஎஸ்கே ரசிகர்கள் உள்பட பலரும் ஆர்சிபி ரசிகர்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மீம்ஸ்களை இங்கு காணலாம். 

  • May 23, 2024, 10:58 AM IST

 

 

1 /9

ஆர்சிபி அணி தனது கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. அதை தொடர்ந்து ஆர்சிபி அணி ரசிகர்கள் சிஎஸ்கேவையும், அதன் ரசிகர்களையும் கலாய்த்து தள்ளினர். இதை தொடர்ந்து எலிமினேட்டரில் தோல்விக்கு பின் ஆர்சிபி வீரர்களை கலாய்க்கும் வகையில் ஒருவர் இவ்வாறு பகிர்ந்துள்ளார். 

2 /9

மலையாளத்தில் சமீபத்தில் வந்து பெரும் வரவேற்பு பெற்ற 'ஆவேஷம்' திரைப்படத்தில் 'மோனே ஹேப்பி யல்லே...' மிகவும் பிரபலமான வசனம் ஆகும். அதில் ஃபகத் ஃபாசிலுக்கு பதில் மலையாளியான சஞ்சு சாம்சன் சிஎஸ்கே ரசிகர்களை நோக்கி அந்த வசனத்தை கேட்கும் வகையில் நகைச்சுவையாக இந்த மீம்ஸ் பதிவிடப்பட்டுள்ளது. 

3 /9

முன்னாள் சிஎஸ்கே வீரர் பத்ரிநாத் அவரது X தளத்தில், "இந்த பருத்தி மூட்டை Goodown-லையே இருந்துருக்கலாம்" என ஆர்சிபியை கலாய்த்து வீடியோ பதிவிட்டுள்ளார். 

4 /9

சிஎஸ்கேவின் தோல்வியை அன்று பெங்களூரு மக்கள் மொத்தமாக கொண்டாடிய நிலையில், ஆர்சிபியின் நேற்றைய தோல்வியை நாடு முழுக்க சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டுவதாக நகைச்சுவையாக இந்த மீம் போடப்பட்டுள்ளது. 

5 /9

தோனி கடந்த போட்டியில் ஆர்சிபி வீரர்களிடம் கைக்குழுக்காமல் சென்றுவிட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், ஆர்சிபி ரசிகர்களை கலாய்த்து இந்த மீம் பதிவிடப்பட்டுள்ளது. 

6 /9

சிஎஸ்கே ரசிகர்களை தொடர்ந்து ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்த நிலையில், ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கேவின் புள்ளிவிவரங்களை குறிப்பிட்டு அவர்களை கேலி செய்யும் வகையில் இந்த மீம் பதிவிடப்பட்டுள்ளது.  

7 /9

அமகதாபாத்தில் ராஜஸ்தான் - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் பார்வையாளராக சென்ற சிஎஸ்கே ரசிகர்கள் குறித்து இந்த மீம் போடப்பட்டுள்ளது.   

8 /9

ஆர்சிபி தொடரில் இருந்து வெளியேறியதை அடுத்து, லீக் சுற்றிலேயே வெளியேறிய அணிகள் அதனை கைத்தாங்கலாக அழைத்துச்செல்வதாக நகைச்சுவையாக இந்த மீம் போடப்பட்டுள்ளது.   

9 /9

ஆர்சிபி அணியால் ஐபிஎல் கோப்பையைதான் வெல்ல இயலவில்லை, சிஎஸ்கே அணியை வீழ்த்தியதற்காக வேண்டுமென்றால் தனி கோப்பையை வழங்கலாம் என ஆர்சிபி ரசிகர்களை கலாய்த்து இந்த மீம் பதிவிடப்பட்டுள்ளது.