பல நாள் கோரிக்கையை நிறைவேற்றிய வாட்ஸ்அப்... வந்தது புதிய அப்டேட் - என்ன தெரியுமா?

Whatsapp Latest Udpates: வாட்ஸ்அப் செயலியில் தற்போது வந்துள்ள அப்டேட் என்ன என்பது குறித்தும், அதன் அப்டேட் குறித்த விரிவான தகவல்களையும் இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : May 23, 2024, 01:15 PM IST
பல நாள் கோரிக்கையை நிறைவேற்றிய வாட்ஸ்அப்... வந்தது புதிய அப்டேட் - என்ன தெரியுமா? title=

Whatsapp Latest Udpates: நம் அன்றாட வாழ்வு தினந்தினம் அப்டேட் ஆகிக்கொண்டு வருவது போல் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு செயலியும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அப்டேட் ஆவதும் இயல்பான ஒரு செயல்பாடுதான். நீங்கள் 2011ஆம் ஆண்டில் இருந்து பேஸ்புக் பயன்படுத்துபவர் என்றால் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும், அன்றைய பேஸ்புக் எப்படியிருந்தது, தற்போதைய பேஸ்புக் எப்படியிருக்கிறது என்று... ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை அப்டேட் ஆவதன் மூலம் பயனர்கள் அதனை இன்னும் எளிமையாக பயன்படுத்தலாம், அதுமட்டுமின்றி அதில் பல்வேறு சேவைகளையும் நீங்கள் பெறலாம்.

அந்த வகையில், வாட்ஸ்அப் செயலியும் அவ்வப்போது சில அப்டேட்களை கொண்டு வரும்.இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை என அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் ஒரு செயலியாக வாட்ஸ்அப் இருப்பதால் அதன் பயன்பாட்டை இன்னும் எளிமையாக்கும் வகையில் இந்த அப்டேட் கொண்டு வரப்படுகிறது. உலகம் முழுக்க உள்ள பயனர்கள் தங்களின் இந்த அப்டேட்களை தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. வாட்ஸ்அப்பில் தற்போது சிலர் அவர்கள் பணி சார்ந்தும் பல்வேறு விஷயங்களை மேற்கொள்வதால் இந்த அப்டேட்கள் அவர்களின் அன்றாட வாழ்வில் நேரம் குறையும் எனலாம்.

மேலும் படிக்க | லேப்டாப்களுக்கு அசத்தலான தள்ளுபடி... ரூ. 40 ஆயிரத்திற்கும் கீழ் கிடைக்கும் 'நச்' மாடல்கள்!

புதிய அப்டேட்

அந்த வகையில், வாட்ஸ்அப்பின் Delete For Me ஆப்ஷன் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதாவது ஒரு மெசேஜ் ஒரு குரூப்பிலோ அல்லது தனிநபருக்கோ அனுப்பிவிட்டு, அதனை இரு தரப்புக்கும் தெரியாமல் அழிக்க நினைத்தால் 'Delete For Everyone' ஆப்ஷனும், உங்கள் சேட்டில் மட்டும் அழிக்க நினைத்தால் 'Delete For Me' ஆப்ஷனும் பயன்படும். இந்த ஆப்ஷன் வாட்ஸ்அப் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக பார்க்கப்பட்டது. இருப்பினும், இதனை நீங்கள் கொடுத்தாலும் நீங்கள் மெசேஜ் அனுப்பியவர்களுக்கு, நீங்கள் அதனை அழித்துள்ளீர்கள் என்பதும் தெரியவந்துவிடும். இருப்பினும், மெசேஜ் அழிப்பதே நோக்கமாகும். 

இந்த ஆப்ஷனை பயன்படுத்தும் போது பலருக்கும் இருந்த ஒரு பிரச்னை என்னவென்றால் Delete For Everyone ஆப்ஷனுக்கு பதில், Delete For Me ஆப்ஷனை தவறுதலாக அழுத்திவிட்டால் அதன்பின் உங்களால் அந்த மெசேஜ் ஒன்றுமே செய்ய முடியாது. இது சில பிரச்னைகள் ஏற்படவும் வழிவகுக்கும். எனவே, Delete For Me கொடுத்தாலும் மீண்டும் அதனை Undo செய்யக்கூடிய வசதியை வாட்ஸ்அப் கொண்டு வர வேண்டும் என்பது பயனர்களின் பல நாள் கோரிக்கை. அந்த கோரிக்கைகளுக்கு வாட்ஸ்அப் செவி சாய்த்துள்ளது. 

வழிமுறைகள்

வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் Delete for Me ஆப்ஷனை கொடுத்தால் தற்போது 5 செகண்ட் வரை Undo செய்துகொள்ளலாம். இனி நீங்கள் தவறுதலாக Delete For Everyone ஆப்ஷனுக்கு பதில் Delete For Me ஆப்ஷனை அழுத்தினால் நீங்கள் பதற்றமடையால் 5 வினாடிகளுக்குள் அதனை Undo செய்து மீண்டும் மெசேஜை வரவைக்கலாம். இதனை எப்படி செய்வது என்பது குறித்து இதில் விரிவாக காணலாம். 

- நீங்கள் டெலீட் செய்ய வேண்டிய மெசேஜை எடுத்துக்கொள்ளுங்கள். 

- அதில் தொடர்ந்து அழுத்தினால், மேலே பல ஆப்ஷன்கள் வரும், அதில் டெலீட் ஆப்ஷனின் ஐகானை கிளிக் செய்யவும்.

- அதில், Delete For Me, Delete, Delete For Everyone என மூன்று ஆப்ஷன்கள் வரும்.

- நீங்கள் Delete For Me கொடுத்த உடன் அதன் பக்கத்தில், message deleted for me என்றும் அதன் பக்கத்தில் UNDO என்ற ஆப்ஷனும் வரும். 

- அந்த மெசேஜை மீண்டும் வரவைக்க வேண்டும் என்றால் Undo கொடுக்கலாம். 

மேலும் படிக்க |வெப்-சீரிஸ் பைத்தியமா நீங்கள்... இடைஞ்சலே இல்லாமல் பார்க்க இந்த ரீசார்ஜ் பிளான்கள் உதவும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News