Budget 2021: Good news காத்திருக்கிறது, வரிவிலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம்!!
அடுத்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைக்கும் பட்ஜெட் திட்டங்களில் நடுத்தர வர்க்கத்தில் வரி செலுத்துவோரை உற்சாகப்படுத்தும் பல விஷயங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Union Budget 2021 Latest News: இந்த ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அடுத்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைக்கும் பட்ஜெட் திட்டங்களில் நடுத்தர வர்க்கத்தில் வரி செலுத்துவோரை உற்சாகப்படுத்தும் பல விஷயங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்பிப்புகளின்படி, COVID-19 தொற்றுநோயை எதிர்கொள்ள மக்களுக்கு உதவ, ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ், முன்னர் அறிவிக்கப்பட்ட சலுகைகளை யூனியன் பட்ஜெட் 2020-21, மேலும் முன்னெடுத்துச் செல்லும். தனிநபர் வருமான வரி செலுத்துவோருக்கான அடிப்படை வரி விலக்கு வரம்பு ரூ .2.50 லட்சத்திலிருந்து ரூ .5 லட்சமாக உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. இதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினரின் தினசரி செலவுகளுக்கான பண இருப்பு அதிகரிக்கும்.
2019 ஆம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில், ஒரு நபரின் வரிவிதிப்பு வருமானம் ஆண்டுக்கு ரூ .5 லட்சம் வரை இருந்தால் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளுக்கும் தள்ளுபடியை (Tax Exemption) அரசாங்கம் முன்மொழிந்தது. ஆனால் அடிப்படை விலக்கு நிலைகள் மாற்றப்படாமல் இருந்தன.
கடந்த ஆண்டும், அடிப்படை வரிவிலக்கு வரம்புகள் மாற்றப்படாமல் இருந்தன. ஆனால், தற்போதுள்ள வரி வழிமுறைக்கும் ஒரு மாற்று வரு முறைக்கும் இடையில் தங்களுக்கு ஏற்ற ஒரு முறையை தேர்வு செய்துகொள்ளும் வசதியை அரசாங்கம் வரி செலுத்துவோருக்கு அளித்தது.
ALSO READ: Budget 2021: இந்த முறை பட்ஜெட் முன்பு இல்லாத வகையில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்!
தனிநபர்களுக்கான அடிப்படை வரி விலக்கு வரம்பை உயர்த்துவதற்கான முன்மொழிவு குறித்து, வரி (Tax) தாக்கங்களை ஆராய்ந்த பின்னர் வருவாய்த்துறை அதன் முடிவை எடுக்கும்.
மேலும், தற்போது ரூ .50,000 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையான பிடித்தங்களின் அளவையும் மத்திய அரசு அதிகரிக்கக்கூடும். இதனால் வரி செலுத்துவோருக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும். 2018-19 நிதியாண்டில் இருந்து மருத்துவ மற்றும் பயண உதவித்தொகைகளுக்கான விலக்குகள் மாற்றத்தைக் கண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
நிலையான பிடித்தங்களின் அளவு அதிகரிப்பதால், மக்கள், மருத்துவ செலவுகளை சமாளிப்பதில் உதவி கிடைக்கும். இந்த தொற்றுநோய் காலத்தில் இந்த செலவுகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வரி வசூலில் குறைந்த வளர்ச்சியால் கட்டுப்படுத்தப்படும் அரசாங்க நிதி, முதலீடு மற்றும் ரிசர்வ் வங்கியின் (RBI) அதிக ஈவுத்தொகை வருமானங்கள் மூலம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஏலம் மற்றும் அவற்றின் மதிப்புமிக்க நிலங்கள் உட்பட பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களின் விற்பனை ஆகியவை இருப்பை அதிகரிக்கக்கூடும். இதனால் நிதிநிலை முற்றிலும் நம் கையை விட்டு போகாமல் கட்டுக்குள் இருக்கும்.
ALSO READ: Gold at lowest price: இந்த நாட்களில் மலிவு விலையில் தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR