புதுடெல்லி: தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற விலையுயர்ந்த உலோகங்கள் மீதான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (GJEPC) மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆலோசனையானது நகைக்கடை அமைப்பால் முன்வைக்கப்பட்ட பட்ஜெட் (Budget 2022) பரிந்துரைகளின் ஒரு பகுதியாகும்.'


23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் (Union Budget 2022) பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.


ALSO READ | Budget 2022: மாத சம்பளம் வாங்குவோரின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? நிறைவேற்றுமா அரசு?


ரத்தினங்கள் மற்றும் நகை ஏற்றுமதி கவுன்சில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. தற்போது 7.5 சதவீதமாக உள்ள தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் பட்டை தீட்டப்பட்ட வைரம் மீதான இறக்குமதி வரியை 7.5 லிருந்து 2.5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.


கடந்த ஆண்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி 10 சதவீதமாக இருந்தது. அதை 4 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சென்ற ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலில் தங்கம் மீதான இறக்குமதி வரியை 12.5 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார் நிதியமைச்சர் (Nirmala Sitharaman) நிர்மலா சீதாராமன். 


இதற்கிடையில் "இந்தியா சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் போது, 100 பில்லியன் டாலர் ஏற்றுமதியை அடைய இலக்கு வைத்துள்ளோம்" என்று ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலின் தலைவர் கொலின் ஷா கூறினார்.


இந்த நிலையில் கடந்த முறை நகைத் துறையினருக்கு அதிர்ச்சியளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இம்முறை நிவாரணம் வழங்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


ALSO READ | Budget 2022: பெண்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுமா? எதிர்பார்ப்புகள் என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR