Budget 2022: சாமானியர்களுக்கு உள்ள எதிர்பார்ப்புகள்: நிறைவேற்றுமா அரசு?
இந்த ஆண்டு, பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், சாமானியர்களுக்கு நிவாரணம் அளிக்கவும் அரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Union Budget 2022: மத்திய பட்ஜெட் 2022-23 பிப்ரவரி 1, 2022 அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்படும். முந்தைய பட்ஜெட்டில், சுகாதாரம் மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியது. இந்த ஆண்டும், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், சாமானியர்களுக்கு நிவாரணம் அளிக்கவும் அரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு மத்தியில் கோவிட்-19 இன் ஓமிக்ரான் மாறுபாடு கவலைகளை எழுப்பியுள்ளது. வரவிருக்கும் பட்ஜெட்டில் சாமானியர்களுக்கு கிடைக்கக்கூடிய முக்கியமான நிவாரணங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
புதிய திட்ட அறிவிப்புகள் வருமா?
சாமானியர்களின் நலனை கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் (Budget 2022) புதிய திட்டங்களை அரசு அறிவிக்கக்கூடும். உதாரணமாக, கடந்த ஆண்டு பட்ஜெட்டில், பிரதமரின் தற்சார்பு கொண்ட ஆரோக்கியமான இந்தியா திட்டம் (PM's Self-Reliant Healthy India Scheme), வாகன ஸ்கிராப்பிங் கொள்கை ஆகியவை அறிவிக்கப்பட்டன. மேலும், கடந்த பட்ஜெட்டில், சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்புக்கு நிதி ஆகியவற்றில் அமைச்சரின் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில், இந்த பட்ஜெட்டில், பொருளாதார மீட்சியை விரைவுபடுத்தவும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கவும் நிதி அமைச்சர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும்.
வரி கட்டமைப்பில் மாற்றங்கள்?
பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய்யப்படவுள்ள பட்ஜெட்டில், அடுத்த நிதியாண்டில் வரி செலுத்துவோருக்கு எந்த அளவிற்கு வரி விலக்கு கிடைக்கும் அல்லது வரிக் கட்டமைப்பில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும் என்பதை அரசு முடிவு செய்யக்கூடும். ஆனால், கடந்த பட்ஜெட்டில் எந்த வித புதிய வரியும் விதிக்கப்படவில்லை.
அதே நேரத்தில், கடந்த பட்ஜெட்டில், வருமான வரி செலுத்துவோருக்கு குறிப்பிடத்தக்க நிவாரணமும் எதுவும் அறிவிக்கப்படவில்லை. வரி விதிப்பிலும் எந்த மாற்றமும் இல்லை.
இருப்பினும், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் (Senior Citizens) மற்றும் ஓய்வூதியம் மற்றும் வைப்புத்தொகை மூலம் வருமானம் பெறுபவர்கள், தங்களின் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டாம் என்ற விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கல்வி மற்றும் உள்கட்டமைப்புக்கு பெரிய ஊக்கம்?
வரவிருக்கும் பட்ஜெட்டில், கல்வி மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. கல்வித்துறையில் வெளியிடப்படும் அறிவிப்புகள், குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையிலும், அவர்கள் நல்வாழ்க்கைக்கு உதவும் வகையிலும் இருக்கும். அதே நேரத்தில், சாலைகள், வீடுகள், மருத்துவமனைகள், ரயில் பாதைகள், மின் கோபுரங்கள் போன்ற உள்கட்டமைப்புகள் தொடர்பாக வெளியிடப்படும் அறிவிப்புகள் சாமானியர்களின் வாழ்க்கையை எளிதாகவும் வசதியாகவும் மாற்றும் வகையில் இருக்கும். ஆகையால், இந்த இரு துறைகளிக் செய்யப்படும் அறிவிப்புகள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வல்லமை படைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, கடந்த பட்ஜெட்டில் மெகா இன்வெஸ்ட்மென்ட் டெக்ஸ்டைல் பார்க் திட்டம், நேஷனல் ஹைட்ரஜன் எனர்ஜி மிஷன், ஹெல்த் இன்ஃப்ராவுக்கு 64180 கோடி மதிப்பிலான பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய இந்தியா திட்டம், கோவிட் தடுப்பூசிக்கு 35,000 ஆயிரம் கோடிகள் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதே நேரத்தில், 100 க்கும் மேற்பட்ட புதிய சைனிக் பள்ளிகள், லேவில் புதிய மத்திய பல்கலைக்கழகம், பழங்குடியினர் பகுதிகளில் 750 ஏக்லவ்யா குடியிருப்பு பள்ளிகள் (Ekalavya Residential Schools) மற்றும் பட்டியலினத்தவருக்கு உதவித்தொகை திட்டம் போன்ற முக்கிய அறிவிப்புகள் கல்வித் துறையில் வெளியிடப்பட்டன.
ALSO READ | Budget 2022 எதிர்பார்ப்புகள்: நேரடி வரிகளில் சலுகைகள், சுங்கவரியில் நிவாரணம்!!
செஸ் அல்லது கலால் வரி பற்றிய அறிவிப்புகள்?
பட்ஜெட்டில் கலால் வரி, சுங்க வரி, இறக்குமதி வரி, செஸ் என இவற்றில் எதையாவது கூட்டினாலும் குறைத்தாலும், அது குறித்த அறிவிப்பை அரசு அளிக்கும். பணவீக்கம் குறைவாக உள்ளதா அல்லது அதிகமாக உள்ளதா என்பதில் இது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதால் நுகர்வோர் அதிக விலையை செலுத்த வேண்டியிருக்கும். அதே நேரத்தில், வரி குறைப்பால், பொருட்களின் விலை மலிவாகும்.
இது தவிர, புதிய செஸ் (Cess) விதிப்பது அல்லது பழைய கட்டணத்தில் மாற்றம் செய்வது குறித்தும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுவது வழக்கம். இதுவும் சாமானியர்களை நேரடியாகத் தாக்கும்.
உதாரணமாக, கடந்த பட்ஜெட்டில் சில பொருட்களுக்கு விவசாய உள்கட்டமைப்பு செஸ் விதிக்கப்பட்டது. அதன் பலன் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், கடந்த பட்ஜெட்டில், நகை தொழிலுக்கு நிவாரணம் அளித்து, சுங்க வரியை 12.5 சதவீதத்தில் இருந்து 10.75 சதவீதமாக குறைத்து நிதியமைச்சர் உத்தரவிட்டார்.
இது தவிர, ஒரு பொருளை ஏற்றுமதி செய்ய தடையோ, அல்லது, குறிப்பிட்ட வரம்புக்கு மேல் ஏற்றுமதி, இறக்குமதி செய்யக்கூடாது என்ற விதியோ பட்ஜெட்டில் அமல்படுத்தலாம். இறக்குமதி அல்லது ஏற்றுமதி தொடர்பான ஏதேனும் புதிய விதியை அரசாங்கம் (Central Government) அமல்படுத்தினால், அதுவும் பணவீக்கத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
ALSO READ | Budget 2022: பட்ஜெட் தயாரிப்புகள் தீவிரம்! தனியார் துறையினரிடம் மத்திய அரசு ஆலோசனை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR