Budget 2022: எதிர்பார்ப்புகளும்.. மத்திய அரசின் திட்டமும்..!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நாளை மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி தனது நான்காவது பட்ஜெட் தாக்கல் செய்கிறார். கோவா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநில தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் சூழலில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கொரோனா 3வது அலையால் மக்கள் மேலும் பாதிக்கப்பட்டிருப்பதால், அனைத்து துறையினரும் இந்த பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றன.
பட்ஜெட் கூட்டத்தொடர்
2022 -23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இரண்டு அவைகளிலும் நாளை தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை சீதாராமன் தாக்கல் செய்வார். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன் இந்த ஆய்வறிக்கை சமர்பிக்கப்படும். கடந்த ஓராண்டில் நாட்டின் பொருளாதாரம், எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் மற்றும் அவற்றின் சாத்தியமான தீர்வுகள் குறித்த தகவல்கள் இதில் இடம்பெறும்.
பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும்?
மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு முதல் கூட்டத்தொடர் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறும். இரண்டாம் கூட்டத் தொடர் ஒரு மாத கால இடைவெளியில் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவடையும்.
பட்ஜெட் கூட்டத்தொடர் எப்படி நடத்தப்படும்?
கோவிட் வழிமுறைகளை பின்பற்றி பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. பட்ஜெட் தாக்கலின் முதல் பகுதி ராஜ்யசபாவிலும், இரண்டாவது பகுதி மக்களவையிலும் நடைபெறும்.
ALSO READ | Budget 2022: விவசாயிகளுக்கான பல முக்கிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்ப்பு!!
எவ்வளவு நேரம் பட்ஜெட் தாக்கல் இருக்கும்?
இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மட்டுமே தெரியும். இந்திய வரலாற்றில் 2019 ஆம் ஆண்டு 2 மணி நேரம் 15 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார்ழ அதற்கு அடுத்த ஆண்டான 2020 -ல் 162 நிமிடங்கள் வாசித்து, தனது சொந்த சாதனையை முறியடித்துக் கொண்டார். தேர்தல் மற்றும் கொரோனா ஆகியவை இருப்பதால், இவற்றில் மனதில் வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கும். கூடுதல் நேரம் வாசிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR