பட்ஜெட் 2023: பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் குறித்து அனைவருக்கும் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. வருமான வரி விலக்கு முதல் வேலைவாய்ப்பு வரை அனைத்துத் துறையினரும் இந்த பட்ஜெட்டில் நிவாரணத்தை எதிர்பார்க்கிறார்கள். இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு குறிப்பாக வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்தும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் எம்.டி மற்றும் சி.இ.ஓ பி.கோபகுமார், 2024-ம் ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் தக்கல் செய்யப்படவுள்ள கடைசி முழு பட்ஜெட் இது என்பதால், இதில் அனைவருக்கும் அனுகூலமான பல அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பட்ஜெட்டில் முக்கிய கவனம் எதில் இருக்கும்? 


பட்ஜெட்டின் முக்கிய கவனம் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் இருக்கக்கூடும். தற்போதுள்ள வருமான வரிச் சலுகைகளை நீட்டிக்க சில அறிவிப்புகள் மூலம் ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் கிடைக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். பட்ஜெட்டில் கிராமப்புற செலவுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக பல அறிவிப்புகள் வெளியாகலாம். இதனுடன், தற்சார்பு தன்மையை மேம்படுத்தி, வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான பாதையை அரசு முனைப்புடன் கடைபிடிக்கக்கூடும்.  எஃப்எம்சிஜி, உற்பத்தி, எம்எஸ்எம்இ மற்றும் வங்கி ஆகிய துறைகளில் திடமான நடவடிக்கைகளை அரசு எடுக்கலாம் என்று கோப்குமார் கூறினார்.


அடுத்த ஆண்டு தேர்தல் 


இதனுடன், பல தொழில்கள் தங்கள் தனிப்பட்ட துறைகளுக்கு ஊக்கத்தொகையைக் கோரி வருவதாக ஆராய்ச்சித் தலைவர் அன்மோல் தாஸ் கூறுகிறார். ‘உள்கட்டமைப்பு, உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி போன்ற வணிகங்களுக்கு முக்கிய சலுகைகளுடன் கூடிய பெரிய பட்ஜெட்டை நிதியமைச்சர் முன்வைப்பார் என எதிர்பார்க்கிறோம். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேர்தலைக் கருத்தில் கொண்டு, நிதியமைச்சர் சீதாராமன் வரி அடுக்குகளில் சில நிவாரணம் மற்றும் நேரடி வரிகளுக்கான விலக்கு வரம்புகளை வழங்கலாம்.’ என்று அவர் தெரிவித்தார்.


மேலும் படிக்க | Budget 2023: வேளாண்துறைக்கான விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன? 


நிபுணரின் கருத்து என்ன தெரியுமா?


2023 நிதியாண்டிற்கான செலவு பட்ஜெட் தொகையை தாண்டியாலும், வரி வசூல் அதிகரிப்பால் இதற்கான கணித கணக்கீடு கட்டுப்பாட்டில் இருக்கும் என்று யெஸ் செக்யூரிட்டிஸின் குழுமத் தலைவரும், நிறுவன பங்குகளின் தலைவருமான அமர் அம்பானி கூறினார். ‘2024 நிதியாண்டின் பட்ஜெட், விரிவான பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையுடன் மிதமான ஒன்றாக இருக்கும். கடந்த இரண்டு தசாப்தங்களின் பட்ஜெட் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, ​​நிதி முன்னணியில் NDA குறைந்த விரிவாக்கத்தையே கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது.’ என்று அவர் கூறினார்.


ஜிடிபி கொரோனா நோய்த்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு செல்லும்


அரசாங்கம் தொடர்ந்து கேபெக்ஸில் கவனம் செலுத்தி மறைமுக வரிகளின் பங்கை அதிகரிக்கும் இலக்கை கடைபிடிக்கும் என்று அவர் கூறினார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மானியக் கட்டணங்கள் கோவிட்-க்கு முந்தைய நிலைக்குத் திரும்புவது நிச்சயம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார், 


மேலும் படிக்க | Budget 2023: தள்ளிப்போடப்பட்டதா வங்கி தனியார்மயமாக்கல்? காரணம் என்ன? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ