Budget 2023: நிதி அமைச்சகம் அளித்த நல்ல செய்தி, இனி இதற்கு GST கிடையாது
Budget 2023: நடப்பு நிதியாண்டில் ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள BHIM-UPI பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வங்கிகளுக்கு ரூ.2,600 கோடி ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.
பட்ஜெட் 2023: இன்னும் சில நாட்களில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் பல நல்ல செய்திகள் வரும் என சாமானியர்களுக்கு பல எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டுக்கு முன்பே, அரசாங்கம் மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது.
RuPay டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்பிலான BHIM-UPI பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக வங்கிகளுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி அதாவது ஜிஎஸ்டி விதிக்கப்படாது. இந்த தகவலை நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள BHIM-UPI பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வங்கிகளுக்கு ரூ.2,600 கோடி ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.
ரூபே டெபிட் கார்டு
ரூபே டெபிட் கார்டு மற்றும் குறைந்த மதிப்புள்ள BHIM-UPI பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்கான ஊக்கத் திட்டத்தின் கீழ், ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் மற்றும் ரூ.2,000 வரையிலான குறைந்த மதிப்புள்ள BHIM-UPI பரிவர்த்தனைகளின் மதிப்பின் சதவீதமாக வங்கிகளுக்கு அரசாங்கம் ஊக்கத்தொகையை வழங்கும். பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகள் சட்டம், 2007, வங்கிகள் மற்றும் கணினி வழங்குநர்கள் ரூபே டெபிட் கார்டுகள் அல்லது BHIM மூலம் பண பரிமாற்றம் செய்வதற்கு கட்டணம் பெறுவதை தடை செய்கிறது.
ஜிஎஸ்டி
டிசம்பரில் மட்டும் ரூ.12.82 லட்சம் கோடி மதிப்பிலான 782.9 கோடி டிஜிட்டல் பேமெண்ட் பரிவர்த்தனைகளை யுபிஐ செய்து சாதனை படைத்துள்ளது. ஜிஎஸ்டியின் தலைமை ஆணையர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், இந்த ஊக்கத்தொகை சேவையின் மதிப்புடன் இணைக்கப்பட்ட மானியத்துடன் நேரடியாக தொடர்புடையது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது மத்திய ஜிஎஸ்டி சட்டம், 2017 இன் விதிகளின் கீழ் பரிவர்த்தனையின் வரி விதிக்கக்கூடிய மதிப்பின் ஒரு பகுதியாக இல்லை.
ஜிஎஸ்டி விகிதம்
"கவுன்சிலின் பரிந்துரையின்படி, ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள BHIM-UPI பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) வழங்கும் சலுகைகளுக்கு ஜிஎஸ்டி பொருந்தாது" என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்தகைய பரிவர்த்தனை மானிய வடிவில் இருக்கும். இவற்றுக்கு வரி விதிக்கப்படாது.
வரி அடுக்கில் (டேக்ஸ் ஸ்லேப்) எதிர்பார்க்கப்படும் மாற்றம்
இந்த பட்ஜெட்டில் அதிக வரி செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என வரி செலுத்துவோர் நம்புகின்றனர். அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி அடுக்குகளின் வரும் மாற்றங்கள் மூலம் நிவாரணம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டங்களின் உற்பத்தியை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதன் மூலம் செமி கண்டக்டர் போன்ற தொழில்களில் ஈடுபடும் மக்களுக்கு பயன் கிடைக்கும்
மேலும் படிக்க | Budget 2023: மாத சம்பளக்காரர்களுக்கு பட்ஜெட்டில் கிடைக்கவுள்ள ஜாக்பாட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ