இன்று முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம், சாமானியர்களுக்கு நேரடி தாக்கம்

Changes From 1 January 2023: இன்று முதல் புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில், ஆண்டின் முதல் நாளிலேயே பல விதிகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் முழு விவத்தை இங்கே காண்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 1, 2023, 09:42 AM IST
  • புதிய ஆண்டில் முக்கியமான பல விதிகளில் மாற்றம் ஏற்படும்.
  • இந்த விதிகள் குறித்த தகவல்களை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
  • இனிவரும் காலங்களில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
இன்று முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம், சாமானியர்களுக்கு நேரடி தாக்கம் title=

இன்று முதல் புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில், ஆண்டின் முதல் நாளிலேயே பல விதிகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி சுங்க வரியில் இருந்து, கேஸ் சிலிண்டர் விலை, வங்கி லாக்கர் உள்ளிட்ட பல விதிகள் மாறியுள்ளது, இவை பொதுமக்களின் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் 
வங்கி, இன்சூரன்ஸ், போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் தொடர்பான இந்த விதிகள் குறித்த தகவல்களை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் இனிவரும் காலங்களில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். புதிய ஆண்டில் (இன்று) முக்கிய விதிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

1. கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்ந்துள்ளது
இன்று முதல் கேஸ் சிலிண்டர் விலை பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி வர்த்தக சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரித்துள்ளது. அதே சமயம், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏறப்படவில்லை.

மேலும் படிக்க | 7th pay commission: அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய புத்தாண்டு பரிசு!

2. இன்று முதல் அதிகரிக்கும் கார்களின் விலை
இன்று முதல் அதாவது ஜனவரி 1, 2023 முதல், வாகனங்களின் விலை அதிகரித்துள்ளது. Maruti Suzuki, Hyundai Motor, Tata Motors, Mercedes-Benz, Audi, Renault, Kia India, MG Motor உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களின் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

3. மொபைல் விதிகள் மாறும்
அனைத்து தொலைபேசி உற்பத்தியாளர்களும், அவற்றை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் 1 ஆம் தேதி முதல் அனைத்து தொலைபேசிகளின் IMEI எண்ணைப் பதிவு செய்வது அவசியமாகிறது.

4. வங்கி லாக்கர் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படும்
இன்று முதல், ரிசர்வ் வங்கி மூலம் லாக்கர் வசதி வைத்திருக்கும் அனைவருக்கும் ஒப்பந்தம் தயார் செய்யப்படும். இதில் வாடிக்கையாளர்கள் கையெழுத்திட வேண்டும். ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, தங்கள் லாக்கர் ஒப்பந்தத்தில் ஏதேனும் நியாயமற்ற நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் உள்ளதா என்பதை வங்கிகள் முடிவு செய்யும்.

5. கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம்
HDFC வங்கியும் பணத்தைத் திரும்பப்பெறும் புள்ளி மற்றும் கட்டணங்களை மாற்றப் போகிறது. இந்த மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தவிர, சில கார்டுகளின் விதிமுறைகளை மாற்றவும் எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.

6. ஜிஎஸ்டி விதிகளில் மாற்றங்கள்
ஜிஎஸ்டி விதிகளும் ஜனவரி 1 முதல் மாறும். 5 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் உள்ள வணிகர்கள் மின் விலைப்பட்டியல்களை (இ-இன்வாய்ஸ்) உருவாக்குவது இப்போது அவசியமாகிறது.

7. மடிக்கணினியில் கூகுள் க்ரோம் வேலை செய்யாது
இன்று முதல், Windows 7 மற்றும் 8.1க்கான புதிய Chrome பதிப்புகளுக்கான அதிகாரப்பூர்வ ஆதரவு நிறுத்தப்படும். அதாவது, இந்த பதிப்புகளைக் கொண்ட மடிக்கணினிகளில் இனி பயனர்கள் க்ரோம் ப்ரவுசரைப் பயன்படுத்த முடியாது. இந்த அறிவிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்த ஆதரவு 7 பிப்ரவரி 2022 அன்று மூடப்படும்.

மேலும் படிக்க | 80 கோடி மக்களுக்கு நற்செய்தி: 2023 முதல் இந்த பொருட்கள் இலவசமாக கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News