Budget 2024: பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் தேர்தல் முடிவுகளை மாற்றுமா?
2024 பட்ஜெட்டில் வருமான வரி விலக்கை அதிகரிக்க வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேசமயம் அரசு வேலைகள் தொடர்பாகவும் பெரிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
பொதுவாக இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் பெரும்பாலும் தவிர்க்கப்படுகின்றன. ஆனால் கடந்த 2019 இடைக்கால பட்ஜெட்டில் 23 பெரிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. இதன் மூலம் ஒரு புதிய திருப்பத்தை கொண்டு வந்தது மோடி அரசு. 2019 இடைக்கால பட்ஜெட்டில் அரசு, பிரதமர் கிசான் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு ரூ.6,000 உதவி தொகை வழங்குவதாக அறிவித்தது. விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் ஆண்டு முழுவதும் 3 தவணைகளில் இந்த பணத்தை பெற்று வருகின்றனர். மேலும், தேர்தலுக்கு முன்பே 2 தவணைகளை வழங்கி விவசாயிகளை ஆச்சர்யப்படுத்தியது. இதன் விளைவாக 2014-ஐ விட 2019 தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
மேலும் படிக்க | Budget 2024: கடந்த பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் என்ன என்ன தெரியுமா?
2009 தேர்தலுக்கு முன் வெளியான முக்கிய அறிவிப்புகள்
2009ம் ஆண்டு வர விருந்த தேர்தலுக்கு முன்பு, இடைக்கால பட்ஜெட்டுக்காக காத்திருக்காமல் மன்மோகன் சிங் அரசு 2008-ம் ஆண்டிலேயே சுமார் ரூ.65 ஆயிரம் கோடி விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தது. இதன் செயலின் பின்பு 2004ம் ஆண்டை விட 2009ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. மேலும், 2014 இடைக்கால பட்ஜெட்டில் விவசாய கடனை அதிகரிப்பதுடன் வட்டி மானிய திட்டமும் தொடரும் என காங்கிரஸ் அரசு அறிவித்தது. 2009ம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ரூ.1.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக வரி வரம்பை உயர்த்தினார்.
அதே போல், 65 வயதிற்கு மேற்பட்ட பெண்களு வரி வரம்பு ரூ.1.45 லட்சத்தில் இருந்து ரூ.1.8 லட்சமாக உயர்த்தப்பட்டது மற்றும் மூத்த குடிமக்களுக்கான வரி வரம்பு ரூ.1.95 லட்சத்தில் இருந்து ரூ.2.25 லட்சமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2014 தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் வேறு சில அறிவிப்புகள் வெளியாகின. கார்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் மலிவான விலையில் மாற்றுவதற்காக கலால் வரி 3 மாத காலத்திற்கு குறைக்கப்பட்டது. இதில் சிறிய கார்கள், இருசக்கர வாகனங்கள், ஸ்கூட்டர்கள் மீதான கலால் வரி 12 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டது.
2019 தேர்தலுக்கு முன் வெளியான முக்கிய அறிவிப்புகள்
2019ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த முக்கியமான அறிவிப்பை தவிர, ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக நிலையான விலக்கு, டெபாசிட்டுகளுக்கான டிடிஎஸ் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. மேலும், பிரதமர் கியான், MNREGA பட்ஜெட்டை அதிகரிப்பு போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. எனவே, இந்த முறை தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டிலும் மத்திய அரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். வருமான வரி விலக்கை அதிகரிக்க வேண்டும் என்று பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேசமயம் இது 2024க்கான இடைக்கால பட்ஜெட்டாக இருந்தாலும் அரசு வேலை வாய்ப்புகள் தொடர்பாக பெரிய அறிவிப்பை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ