Budget 2024: இந்த இடைக்கால பட்ஜெட் மூலம் சாமானியர்களின் இந்த பிரச்சனைகள் தீரும்!
Budget 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது ஆறாவது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த இடைக்கால பட்ஜெட்டிலும் பெரிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.
Budget 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதியான இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்தியாவில் ஏப்ரல் மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த இடைக்கால பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. மக்களை கவரும் வகையில் இந்த முறை பட்ஜெட்டில் பெண்களுக்கு அதிக சலுகைகள் அறிவிக்கப்படலாம். இந்தியாவில் நிர்வாகத்தில் பெண்களின் பங்கை அதிகரிக்க அரசு முயற்சித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு நகரங்களில் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் வெளியாக கூடும்.
எந்த திட்டங்களுக்கு அறிவிப்பு?
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா மற்றும் பெண்கள் தொழில் முனைவோர் போன்ற திட்டங்களில் புதிய அறிவிப்புகளை அரசு அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற திட்டங்களில் புதிய விஷயங்களை சேர்க்க ஏற்கனவே பல கோரிக்கைகள் இருந்து வருகிறது. இதனால் அவற்றை அரசு மாற்றும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். பெண் தொழிலாளர்கள், பெண் தொழில்முனைவோர் ஆகியோருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பதன் மூலம் இந்திய பொருளாதாரத்தில் அவர்களின் பங்கும் வலுப்பெறும். இது பெண்களின் சமூக மேம்பாட்டிற்கு வழிவகுக்கிறது மற்றும் இந்தியாவின் வளர்ச்சி பாதையையும் மாற்றுகிறது. அதே போல, இந்த இடைக்கால பட்ஜெட்டில் 2019ம் ஆண்டு போலவே சில வரிவிலக்குகளை அரசு அளிக்கலாம் என்று கூறப்படுகிறது. 2019ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில், அப்போதைய நிதியமைச்சர் பியூஷ் கோயல் 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு முழு வரிவிலக்கு அளிப்பதாக அறிவித்திருந்தார்.
இதனுடன், நிலையான வரி விலக்கு ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும், வங்கி மற்றும் அஞ்சல் அலுவலக டெபாசிட்டுகளுக்கான டிடிஎஸ் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது. மேலும், 2019 இடைக்கால பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட மற்றொரு பெரிய அறிவிப்பு, விவசாயிகளுக்கான பிரதமர் கிசான் திட்டம் ஆகும். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 உதவி தொகை அறிவித்தது. மேலும், கால்நடை வளர்ப்பு, மீன்வளத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் கிசான் கிரெடிட் கார்ட் மூலம் வட்டி மானியத்தின் பலனையும் பெற்றனர். இதனால் இந்த இடைக்கால பட்ஜெட் மக்களுக்கு பல வகையான நிவாரணங்களை வழங்கும் பட்ஜெட்டாகவும் உள்ளது. 2024 தேர்தலுக்கு பிறகு புதிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யும், அதற்கு முன்பு வாக்காளர்களை கவரும் வகையில் பல அறிவிப்புகளை அரசு வெளியிடுகிறது.
கொரோனா தொற்றுக்கு பிறகு கார்களின் விலை, வீடுகளின் விலை, உணவு மற்றும் போக்குவரத்துக்கு செலவுகள் அதிகரித்துள்ளதால் அரசு தற்போது பின்தங்கிய துறைகளில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கிராமப்புறங்களில் உள்ள மந்தநிலையை போக்கி, அங்கு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அறிவிப்புகளை மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் வெளியிட கூடும். அதே போல, குறைந்த விலையில் உள்ள கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க சில அறிவிப்புகளை வெளியிடவும் அரசு பரிசீலித்து வருகிறது.
தற்போதுள்ள உலக பொருளாதாரத்தின் மந்தநிலையை மனதில் கொண்டு, பழைய மற்றும் புதிய துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான கொள்கைகள் மீது மத்திய அரசு மேலும் நடவடிக்கைகளை எடுக்கலாம். எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல புதிய விஷயங்களை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதற்கு மத்தியில் மக்களுக்கான சிறப்பு அறிவிப்பாக இந்த பட்ஜெட் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ