Budget 2024: மத்திய அரசின் இந்த இடைக்கால பட்ஜெட் 2024 சமூக நலன், சுகாதாரம், உள்கட்டமைப்புகள், கல்வி மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கம் பட்ஜெட் தாக்கல் செய்யும் வரை இவை செயல்படுத்தப்படும். 2024 ஏப்ரல் - மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் முன் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இது என்பதால் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிரம்பி உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25க்குக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1 இன்று தாக்கல் செய்கிறார். இந்த இடைக்கால பட்ஜெட் பற்றிய முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில் எந்த எந்த துறைகளில் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளது என்பதை பார்ப்போம்.
மேலும் படிக்க | இன்றே கடைசி நாள்.. FASTagல் அதிரடி மாற்றம், உடனே படிக்கவும்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆறாவது முறையாக மத்திய யூனியன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் இந்தியாவின் உள்கட்டமைப்பு முதல் பாதுகாப்புத் துறைகள் வரை அனைத்திலும் அதிக அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர நடுத்தர குடும்பத்தினரும், முதலாளிகளுக்கும் நிர்மலா சீதாராமன் சிறப்பு அறிவிப்பை பட்ஜெட்டில் அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. இளைஞர்கள் மத்தியில் இருக்கும் மிகப்பெரிய கவலை வேலைவாய்ப்பு தான், இதனால் இந்த பட்ஜெட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்ளும் வகையில், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் இடம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு, இடைக்கால பட்ஜெட்டில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் வகையில் திட்டங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இது தவிர, நடுத்தர வர்க்கத்தினருக்கான வரிச்சலுகை, வீடு வாங்க கடன், பணவீக்கத்திலிருந்து நிவாரணம் மற்றும் வீட்டு கடன் வட்டி விகிதம் போன்றவற்றில் அதிக சலுகைகள் வெளியாக வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை இந்தியா வேலைவாய்ப்புத் திட்டத்தை மத்திய அரசு விரிவுபடுத்தலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும். அதே நேரத்தில், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் NREGS-ன் பட்ஜெட்டையும் அதிகரிக்கலாம். இது தவிர, ரயில்வே, பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்க சில சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிடலாம்.
மேலும் நடுத்தர மக்களுக்கு வரிச்சுமையை குறைக்க, மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரி 80சி பிரிவின் கீழ் விலக்கு பெறுவதற்கான வரம்பை ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்திற்கு மேல் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு செய்தால், பிபிஎஃப் மற்றும் காப்பீட்டின் கீழ் வழங்கப்படும் வரி விலக்கு அதிகரிக்கும், இது நடுத்தர மக்கள் மற்றும் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு நேரடியாக பலனை தரும். இதே போல, 2024 பட்ஜெட்டில் காப்பீடு தொடர்பான விலக்குகளும் அறிவிக்கப்படலாம். இந்த பட்ஜெட்டில், நிதியமைச்சர் ஜிஎஸ்டியில் இருந்து காப்பீட்டுக் கொள்கைகளுக்கு விலக்கு அளிப்பார் என்றும் கூறப்படுகிறது. இது காப்பீட்டு பிரீமியத்தைக் குறைக்கும். இந்த விலக்கு அளிக்கப்பட்டால், காப்பீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, பொருளாதாரம் வளரும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ