Budget Trivia: சிறப்பு பெயர்களால் அறியப்படும் இந்திய பட்ஜெட்கள்
இந்திய பட்ஜெட்களில் பிரபலமான பட்ஜெட்களும் உண்டு, பெயர் வாங்கிய பட்ஜெட்களும் உண்டு... இது சில சிறப்பு பெயர் பெற்ற மத்திய அரசின் பட்ஜெட் தகவல்களின் தொகுப்பு...
புதுடெல்லி: இன்னும் சில வாரங்களில் 2022-23ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலாகவிருக்கிறது. பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த ஆண்டும், மத்திய பட்ஜெட்டை தமிழகத்தைச் சேர்ந்த திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர் என்ற முறையில் தாக்கல் செய்யவிருக்கிறார்.
இந்திய பட்ஜெட்களில் பிரபலமான பட்ஜெட்களும் உண்டு, பெயர் வாங்கிய பட்ஜெட்களும் (Budgets of India) உண்டு. கருப்பு பட்ஜெட் என்றும் மில்லினியம் பட்ஜெட் என்றும் பல்வேறு பெயர் பெற்ற பட்ஜெட்கள் இருந்தாலும், அவற்றில் சில பட்ஜெட்கள் இவை...
இந்தியாவின் முதல் பட்ஜெட் ஏப்ரல் 7, 1860 அன்று அப்போதைய நிதி அமைச்சர் ஜேம்ஸ் வில்சனால் தாக்கல் செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய பட்ஜெட்டை1947-ஆம் ஆண்டில் தாக்கல் செய்தார் ஆர்.கே.சண்முகம் செட்டியார்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, நாட்டில் முழு பட்ஜெட்டும், இடைக்கால பட்ஜெட்டும் பலமுறை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வெவ்வேறு பெயர்களில் அங்கீகாரம் பெற்ற சில சிறப்பு பட்ஜெட்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ | பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி நிதி
Black Budget: 1973-74ல் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், 'கருப்பு பட்ஜெட்' என்று விமர்சனங்களை சந்தித்தது. அதற்கு காரணம், அந்த பட்ஜெட்டில் 550 கோடி ரூபாய் பற்றாக்குறை இருந்தது.
Epochal Budget: காங்கிரஸ் ஆட்சியில், நரசிம்மராவ் அரசாங்கத்தின் கீழ் நிதியமைச்சர் மன்மோகன் சிங், உலகமயமாக்கலை இந்தியாவிற்கு வ்ரவேற்கும் நடவடிக்கைகளை எடுத்தார்.
இறக்குமதி உரிமம் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இந்த பட்ஜெட் (Union Budget), மாற்றத்துக்கான பட்ஜெட், உலகமயமாக்கலுக்கு முக்கியத்துவம் கொடுத்த பட்ஜெட் என்று பெயர் பெற்றது.
The Rollback Budget: 2002-03ல் யஷ்வந்த் சின்ஹா தாக்கல் செய்த பட்ஜெட், இந்திய வரவுசெலவு திட்டங்களில் சிறப்பானதாக கூறப்பட்ட்டது. The Rollback Budget என்ற பெயர் பெற்ற பட்ஜெட்,, அப்போதைய NDA அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்த சின்ஹாவால் தாக்கல் செய்யப்பட்டது.
பல திட்டங்களைத் திரும்பப் பெற வேண்டியிருந்ததால், இது 'ரோல்பேக் பட்ஜெட்' என்று அறியப்பட்டது. இந்த பட்ஜெட்டில், ஐடி துறைக்கான முக்கியத்துவம் முதல் முதலில் அறிமுகமானது. ஐடி துறையின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்த பட்ஜெட் இது.
ALSO READ | Budget 2022: பட்ஜெட் தயாரிப்புகள் தீவிரம்! தனியார் துறையினரிடம் மத்திய அரசு ஆலோசனை
Dream Budget: அன்றைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த 1997-98 பட்ஜெட், தனிநபர் வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி குறைப்பு உள்ளிட்ட முக்கிய சீர்திருத்தங்களுக்கான திருப்பத்தை ஏற்படுத்துவதாக இருந்ததால் அமைத்ததால், 'கனவு பட்ஜெட்' என்று அழைக்கப்பட்டது.
1986 பட்ஜெட் கேரட் அண்ட் ஸ்டிக் பட்ஜெட் (Carrot and Stick) என்று அழைக்கப்பட்டது. அன்றைய நிதியமைச்சர் வி.பி சிங் தாக்கல் செய்த அந்த பட்ஜெட்டில், நன்மைகளும், பின்னடைவுகளும் கலந்து இருந்ததாக கூறப்பட்டது. எனவே, அந்த பட்ஜெட்டிற்கு, கேரட் அண்ட் ஸ்டிக் என்று விமர்சனங்கள் எழுந்தன.
READ ALSO | ஆதார் அட்டை போலவே தனித்துவமான ஹெல்த் அட்டை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR