Digital Health ID: ஆதார் அட்டை போலவே தனித்துவமான ஹெல்த் அட்டை! பெறுவது எப்படி?

ஆதார் அட்டை போன்ற தனித்துவமான டிஜிட்டல் ஹெல்த் ஐடி கார்டைப் பெறுங்கள்,  இனிமேல் மருத்துவரிடம் உங்கள் உடல்நிலை பற்றிய முழுமையான பதிவேடு இருக்கும்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 20, 2021, 12:39 PM IST
  • தனித்துவமான ஹெல்த் அட்டை
  • ஆதார் அட்டை போலவே பிரத்யேக அடையாள அட்டை
  • டிஜிட்டல் ஹெல்த் மிஷனின் திட்டம்
Digital Health ID: ஆதார் அட்டை போலவே தனித்துவமான ஹெல்த் அட்டை! பெறுவது எப்படி? title=

Unique Digital Health ID card: இப்போது ஆதார் போல, மக்களுக்கு விரைவில் சுகாதார அட்டை வழங்கப்படும். இந்த ஹெல்த் கார்டில், ஒரு பிரத்யேகமான எண்ணைப் பெறுவீர்கள். இது சுகாதாரத் துறை, ஒருவரின் முழு சுகாதார பதிவுகளை பராமரிக்கும்.  இனிமேல் மருத்துவரிடம் உங்கள் உடல்நிலை பற்றிய முழுமையான பதிவேடு இருக்கும்.

ஆதார், பான் போன்ற எல்லா ஆவணங்களும் உங்கள் அடையாளத்திற்கு பயனுள்ளதாக இருக்கும், அவை அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, இப்போது உங்கள் உடல்நிலை தொடர்பான கார்டு ஒன்றை அரசு தயாரிக்கப் போகிறது, அதில் உங்கள் உடல்நிலை குறித்த அனைத்துப் பதிவுகளையும் பதிவு செய்யக் கூடியது, அதுவும் ஆதார் போலத்தான் இருக்கும். 

டிஜிட்டல் ஹெல்த் மிஷனின் (Digital Health Mission) கீழ், அரசாங்கம் ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனிப்பட்ட ஹெல்த் கார்டை உருவாக்கப் போகிறது. இதில், ஆதார் அட்டை போன்று, உங்களுக்கு ஒரு எண் கிடைக்கும், இது சுகாதாரத் துறையில் உள்ள நபரை அடையாளம் காணும். இதன் மூலம், மருத்துவர் உங்களின் முழுமையான உடல்நலப் பதிவேட்டை அறிந்து கொள்வார்.

தனிப்பட்ட சுகாதார அட்டை எவ்வளவு பயனுள்ளது?
இந்த பிரத்யேக அட்டை மூலம் ஒருவர் எங்கு சிகிச்சை பெற்றார் என்பது தெரியவரும். மேலும், தனிப்பட்ட சுகாதார அட்டையில் நபரின் உடல்நிலை தொடர்பான ஒவ்வொரு விவரமும் பதிவு செய்யப்படும். இதன் மூலம், நோயாளி எப்போதும் அவருடைய கோப்புகளையும், ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. 

ALSO READ | இனி கடவுளுக்கும் கட்டாயமா ஆதார் அட்டை? வைரலாகும் ஆதார் காளி

மருத்துவர் அல்லது மருத்துவமனை நோயாளியின் தனிப்பட்ட ஹெல்த் ஐடியைப் பார்ப்பதன் மூலம் அவரது நிலையை அறிந்து கொள்ள முடியும், அதன் பிறகு இந்த அடிப்படையில் மேலும் சிகிச்சையைத் தொடங்கலாம். இந்த அட்டை மூலம், அந்த நபர் அரசின் திட்டங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை வசதிகளின் பலனை நோயாளி பெறுகிறாரா என்பது, இந்த தனித்துவமான அட்டை (Unique ID) மூலம் அறியப்படும்.

யுனிக் ஹெல்த் கார்டில் என்ன கிடைக்கும்?

ஆதார் அட்டையைப் போலவே, யுனிக் ஹெல்த் ஐடியின் கீழ், ஒவ்வொரு நபரின் உடல்நலம் தொடர்பான தரவுத்தளத்தை அரசாங்கம் தயாரிக்கும். இந்த அடையாள அட்டையுடன், அந்த நபரின் மருத்துவப் பதிவேட்டில் அனைத்து விவரங்களும் வைக்கப்படும். இந்த ஐடியின் உதவியுடன், ஒரு நபரின் முழுமையான மருத்துவ பதிவைக் காணலாம். 

அந்த நபர் ஒரு டாக்டரிடம் சென்றால், அவர் தனது ஆரோக்கிய அடையாளத்தைக் காண்பிப்பார். இதற்கு முன் என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது, எந்தெந்த மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது, எந்தெந்த மருந்துகள் முன்பு கொடுக்கப்பட்டது என்பது தெரிய வரும். இந்த வசதியின் மூலம், அரசு மக்களுக்கு சிகிச்சை போன்றவற்றிலும் உதவ முடியும்.

ALSO READ | ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு; இந்த மகத்தான பலனை நீங்கள் பெறலாம்

இந்த முக்கியமான விஷயங்கள் யுனிக் ஹெல்த் கார்டில் பதிவு செய்யப்படும்
இதில், அந்த நபரின் அடையாள அட்டை உருவாக்கப்பட்டு, அவரிடமிருந்து மொபைல் எண், ஆதார் எண் எடுக்கப்படும். இந்த இரண்டு பதிவுகளின் உதவியுடன், ஒரு தனிப்பட்ட சுகாதார அட்டை உருவாக்கப்படும். 

இதற்காக, அரசாங்கம் ஒரு சுகாதார ஆணையத்தை உருவாக்கும், இது தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும். ஹெல்த் ஐடி தயாரிக்கப்பட வேண்டிய நபரின் சுகாதார பதிவுகளை சேகரிக்க சுகாதார ஆணையத்தால் அனுமதி வழங்கப்படும்.

இதன் அடிப்படையில் மேலும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஒரு பொது மருத்துவமனை, சமூக சுகாதார மையம், சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையம் அல்லது தேசிய சுகாதார உள்கட்டமைப்பு பதிவேட்டுடன் இணைக்கப்பட்ட அத்தகைய சுகாதார வழங்குநர் ஒரு தனிநபரின் சுகாதார ஐடியை உருவாக்க முடியும். உங்கள் சொந்த பதிவுகளை https://healthid.ndhm.gov.in/register இல் பதிவு செய்வதன் மூலமும் உங்கள் ஹெல்த் ஐடியை உருவாக்கலாம்.

Also Read | எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் ஆதார் அட்டை செய்வது எப்படி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News