CA Final Result 2022: படிப்பதற்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் போதும், பணம் தேவை இல்லை. படிக்கும் ஆசை இருந்தால் போதும், வசதி தேவையில்லை. இவற்றை மிக அழகாக நிரூபித்து இருக்கிறார் ஒரு மாணவர். டீ மற்றும் கச்சோரி விற்பனை செய்யும் ஒரு எளிய மனிதரின் மகன் வைபவ் மகேஸ்வரி சிஏ தேர்வில் அட்டகாசமான வெற்றியை பெற்றுள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைபவ் மகேஸ்வரி சிஏ இறுதித் தேர்வில் அகில இந்திய அளவில் 10 ஆவது இடத்தைப் (AIR 10) பெற்றுள்ளார். செவ்வாயன்று வெளியான சிஏ இறுதி முடிவுகளில் அவர் 800 மதிப்பெண்களுக்கு 589 மதிப்பெண்கள் எடுத்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. 


இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு ஊடகங்களிடம் தன் எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். “எனது இடைநிலைத் தேர்வில், நான் 15 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் AIR 50 ரேங்கைத் தவறவிட்டேன். ஆனால் இப்போது, சிஏ இறுதிப் போட்டியில் AIR 10 ஐப் பெற்றிருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. என்னால் இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.” என்று கூறியுள்ளார். 


மேலும் படிக்க | Budget 2023: சாமானியர்களுக்கு பட்ஜெட்டில் கிடைக்கவுள்ள மெகா பரிசு, விவரம் இதோ!!


மேலும், இந்த வெற்றியால் தனது கனவு நிஜமாகியுள்ளதாகவும், தனக்கு பெரிய அளவிலான மகிழ்ச்சி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அனைத்து தேர்வுகளையும் ஒரே நேரத்தில் கிளியர் செய்ததும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். 


அவரது தந்தை ஜெய்ப்பூரில் உள்ள மானசரோவரில் உள்ள ஒரு சிறிய உணவகத்தில் தேநீர் விற்கிறார். வைபவ் நிதி ரீதியாக வலுவான பின்னணியைச் சேர்ந்தவர் அல்ல. சிஏ தேர்வில் வெற்றி பெற தினமும் 10 மணி நேரம் படித்து வந்தார்.


அவரது உத்வேகத்தைப் பற்றி பேசுகையில், அவர் தனது மூத்த சகோதரரால் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார். அவரது மூத்த சகோதரரும் அதே தொழில்துறையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வைபவின் தாய் ஒரு இல்லத்தரசி, தந்தை டீ மற்றும் தின்பண்டங்களை விற்று வருகிறார். 


அனைத்து பாடங்களையும் அவ்வப்போது முடித்து விடுவதாகவும், எந்த சந்தேகம் வந்தாலும் உடனுக்குடன் அதை நிவர்த்தி செய்துகொள்வதை தனது வழக்கமாக வைத்திருந்ததாகவும் வைபவ் கூறினார். கடைசி நான்கு மாதங்கள் தினமும் 10-12 மணி நேரம் படிப்பதை வழக்கமாக்கிக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். 


சிஏ இறுதி முடிவுகள் 2022


சிஏ ஃபனல் மற்றும் இண்டர் 2022 தேர்வுகளுக்கான முடிவுகள் ஜனவரி 10, 2023-ல் அறிவிக்கப்பட்டன. நவம்பர் 2022 இல் நடைபெற்ற தேர்வுக்கான முடிவு வெளியிடப்பட்டது. சிஏ ஃபனல் மற்றும் இண்டர் 2022 தேர்வுகளில் ஹர்ஷ் சவுத்ரி மற்றும் திக்ஷா கோயல் ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர். இவர்கள் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றனர் (AIR1).


மேலும் படிக்க | Budget 2023: இந்தியாவின் வருமானத்திற்கான வழிகள் என்ன? ‘நாட்டு பட்ஜெட்’ வருவாய் வழிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ