Graduate Aptitude Test in Engineering 2023: கிராஜுவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங் முதுகலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகவுள்ளது. GATE 2023 நுழைவுச்சீட்டை, gate.iitk.ac.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) கான்பூர் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (GATE) 2023 நுழைவுச் சீட்டை இன்று (செவ்வாய்க் கிழமை 3 ஜனவரி 2023) வெளியிட்டுள்ளது. GATE 2023க்குத் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளவேண்டும்.
முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்த பின் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை கவனமாக சரிபார்க்க வேண்டும் என்று தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
GATE 2023 நுழைவுச்சீட்டு என்பது தேர்வின் போது அனைத்து விண்ணப்பதாரர்களும் எடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான ஆவணமாகும். ஹால் டிக்கெட் இல்லாமல் தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, gate.iitk.ac.in இலிருந்து பதிவிறக்கம் செய்வதுஎன்பது, திறன் தேர்வுக்குத் தயாராகும் அனைத்து மாணவர்களுக்கும் முக்கியமானது.
மேலும் படிக்க | ரயில் பயணத்தில் இவர்களுக்கு உணவு, தண்ணீர் இலவசம்! 90% பேருக்கு தெரிவதில்லை
BHEL, GAIL, HAL, IOCL, NTPC, NPCIL, ONGC, PGCI உட்பட சில பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் அடிப்படையான தகுதி தேர்வு கேட் 2023 நுழைவுத் தேர்வு ஆகும்.
உயர் கல்வித் துறை மற்றும் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒருங்கிணைப்பு வாரியம் (NCB)– GATE, சார்பாக, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் (IISc) மற்றும் காரக்பூர், மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், சென்னை, ரூர்க்கி மற்றும் பெங்களூரு ஆகிய 7 இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) இணைந்து ஒவ்வொரு ஆண்டும் கேட் தேர்வை நடத்துகிறது. இது IISc மற்றும் IIT களில் முதுகலை (PG) திட்டங்களில் (M.E., M.Tech, PhD) சேர்க்கைக்கான தகுதியான நுழைவுத் தேர்வாகும்.
ஐஐடி கல்லூரிகள், என்ஐடி கல்லூரிகள், ஐஎஸ்எம் தன்பாத், அண்ணா பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், இன்ஸ்டிட்யூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி, விஐடி-வேலூர் தொழில்நுட்ப நிறுவனம், தாபர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி மற்றும் பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், ராஜஸ்தான் ஆகியவை, முதுகலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை செயல்முறையின் போது GATE மதிப்பெண்ணை ஏற்றுக்கொள்ளுகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கேட் நுழைவுத் தேர்வின் மதிப்பெண், முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பின் மூன்றாம் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டில் படித்து வரும் பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை, அறிவியல், வணிகம் அல்லது கலைகளில் ஏதேனும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பை முடித்தவர்கள் GATE தேர்வில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள். கேட் தேர்வுக்கு வயது வரம்பு இல்லை.
இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் நான்கு ஆண்டு பொறியியல் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது இறுதியாண்டில் படித்துக் கொண்டிருக்க வேண்டும்
மேலும் படிக்க | ஒரே நாளில் இவ்வளவு புக்கிங்கா? புத்தாண்டில் OYO-வில் குவிந்த கூட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ