குடியுரிமை சட்டம் எதிர்ப்பு: கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால், அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை போடப்பட்டு உள்ளது.
மங்களூரு: சி.ஏ.ஏ (CAA) மற்றும் என்.ஆர்.சி (NCR) சட்டத்திற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து கூட்டத்தை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளுக்கு மத்தியில் மங்களூரில் இரண்டு பொதுமக்கள் உயிர் இழந்தனர். டெல்லியின் சில பகுதிகளில் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ ஆகியவை தங்கள் சேவைகளை நிறுத்தியதால் இணையம் முடக்கப்பட்டு உள்ளது. டெல்லியின் செங்கோட்டை மற்றும் ஜந்தர் மந்தர் அருகே கூடியிருந்த போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பிரிவு 144 கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் விதிக்கப்பட்டுள்ளது, நேற்று காலை வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா பெங்களூரில் CAA-க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.
மங்களூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது ஏற்ப்பட்ட வன்முறை குறித்து பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை (Basavaraj Bommai), "சில துரோகிகளால் மங்களூரில் வன்முறை நடந்தது. இதில் அண்டை மாநிலமான கேரளாவைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டுள்ளனர். கடந்த 4 நாட்களாக அவர்கள் இதைத் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். தவறான தகவல்களால் இந்த ஆர்ப்பாட்டங்கள் மாநிலம் முழுவதும் நடந்து வருகின்றன. சிலர் தவறாக வழிநடத்துகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் மங்களூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தீ வைக்க தயாராக இருந்தனர். அப்போது போலீசார் அவர்களை சுட்டுக் கொன்றனர் எனக் கூறினார்.
நேற்று கர்நாடக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரஜ்னீஷ் கோயல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மங்களூருவில் "போலி செய்திகள் பரவும் வாய்ப்பு" இருப்பதாலும், அமைதியை உறுதி செய்வதற்கான தடுப்பு நடவடிக்கைக்காக இணைய சேவைகள் தடை செய்யப்படுவதாகவும் கூறினார். மொபைல் சேவைகளை தடை செய்வதன் மூலம் தீவிர சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமைக்கு வழிவகுக்கும். ஏனென்றால் வதந்திகள் பரப்புவதற்கு சமூக ஊடக தளங்கள் பயன்படுத்தப்படலாம். வீடியோக்கள் மற்றும் படங்களை உணர்ச்சிகளைத் தூண்டும் திறன் கொண்டவை என்று ரஜ்னீஷ் கோயலின் விளக்கம் அளித்துள்ளார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.