2018 மார்ச் மாதத்தில் முடிவடைந்த 4வது காலாண்டில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள IDBI வங்கியின் பங்குகளை LIC வாங்குதற்கான ஒப்புதலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதலை தந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நஷ்டத்தில் இயங்கும் IDBI வங்கியின் 51% பங்குகளை LIC வாங்கி கொள்ள  LIC -யின் ஆணையக் குழு சமீபத்தில் வழங்கியிருந்தது. ஏற்கனவே LIC-யின் வசம் IDBI வங்கியின் 8% பங்குகள் இருப்பதால் கூடுதலாக 43% பங்குகளை வாங்குவதன் மூலம் மொத்தம் 51% பங்குகளை LIC கைப்பற்றவுள்ளது. தற்போது இதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதன் மூலம் அரசுக்கு எந்த பணமும் கிடைக்கவிட்டாலும், IDBI வங்கிக்கு , பங்குகளின் விலையை பொறுத்து 13 ஆயிரம் கோடி நிதி ஆதாரமாக கிடைக்கும் என தெரிகிறது.