ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சாரியா ராஜினாமாவை தொடர்ந்து என்.எஸ்.விஸ்வநாதன் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் வங்கிகளின் செயல்பாடுகள், பங்கு பரிவர்த்தனை வர்த்தகம், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அன்னிய செலாவணி நடமாட்டம் ஆகியவற்றை கண்காணித்து, புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகளையும் மத்திய ரிசர்வ் வங்கி செய்து வருகிறது.


மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்ததாஸ் பதவி வகித்து வருகின்றார். துணை ஆளுநராக இருந்த விரால் ஆச்சாரியா கடந்த மாதம் 24-ஆம் தேதி  தனது பதவியை ராஜினாமா செய்தார்.


இந்நிலையில், அந்த பதவியில் முன்னாள் துணை கவர்னர் என்.எஸ்.விஸ்வநாதன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஜூலை 4-ஆம் நாள் இப்பதவியேற்கும் இவர் அடுத்த ஓராண்டு இந்த பதவியை வகிப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.


மத்திய வங்கியில் பணிபுரியும் பி பி கனுங்கோ மற்றும் எம் கே ஜெயின் தவிர மூன்று துணை ஆளுநர்களில் விஸ்வநாதன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்து விரால் ஆச்சார்யா கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.


ஒரு காலத்தில் தன்னை 'ஏழை மனிதனின் ரகுராம் ராஜன்' என்று அழைத்த நியூயார்க் பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர் ஆச்சார்யா, தனது மூன்று ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.