நாடாளுமன்ற வளாகத்தில் ரஃபேல் போர் விமான கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டி காகித விமானத்துடன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் குறித்த மத்திய கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், காங்கிரஸ் ஆட்சியில் பேரம் பேசப்பட்டதைக் காட்டிலும், குறைவான விலையிலேயே ரஃபேல் விமானங்களை பா.ஜ.க. அரசு வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



முன்னதாக, இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காகித விமானத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கிடையே, மக்களவையில் இந்த விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. 




அதே சமயம், இந்திய விமானப் படைக்கு மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் குறித்த தணிக்கை அறிக்கையை CAG மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளது. அதில், ரஃபேல் ஒப்பந்தம் குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, பிற போர் விமானங்களின் விலையையும், ரஃபேல் போர் விமானத்தில் விலையையும் சிஏஜி ஒப்பீடு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. 


மாநிலங்களவையில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-


BJP ஆட்சியில் முந்தைய காங்.,கில் போடப்பட்ட 9 சதவீதத்திற்கு பதிலாக, 2.86 சதவீதம் விலையிலேயே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.* 126 போர் விமானங்களுக்கு பதிலாக 36 விமானங்கள் உடனடியாக வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் இந்தியாவிற்கு 17.08 சதவீதம் தொகை மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. இறுதி நிலை விலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்ததே கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. 126 போர் விமானங்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்ததை விட முதல்கட்டமாக 18 ரபேல் போர் விமானங்கள் 5 மாதங்களில் சப்ளை செய்யப்படும். இருப்பினும் அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் ரபேல் போர் விமான விலை குறித்து எந்த விபரமும் குறிப்பிடப்படவில்லை.