Chief Minister of Delhi: நேற்றிரவு (மார்ச் 21) சுமார் 2 மணிநேர விசாரணைக்குப் பிறகு அமலாக்கத் துறையால் (Enforcement Directorate) டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் (Excise Policy Case) கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஆம் ஆத்மி கட்யினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை அடுத்து, டெல்லி முதல்வராக அவர் நீடிப்பாரா? இல்லையா? என சந்தேகம் எழுந்த நிலையில், டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் நீடிப்பார் என்றும், சிறையில் இருந்தே ஆட்சியை நடத்துவார் என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இது சாத்தியமா? இது தொடர்பாக சட்டம் என்ன சொல்கிறது? என்பதை அறிந்துக்கொள்ளுவோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக நீடிப்பார் -ஆம் ஆத்மி


டெல்லி அரசின் அமைச்சராக இருக்கும் அதிஷி, "கைது செய்யப்பட்டாலும் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக நீடிப்பார். அவர் தான் டெல்லியின் முதலமைச்சர், இன்றும் முதலமைச்சர் இருக்கிறார், நாளையும் முதலமைச்சராகவே இருப்பார். மேலும் சிறையில் இருந்தே ஆட்சியை நடத்த வேண்டியிருந்தாலும், அவர் அதை செய்வார்" என்றார்.


அதேபோல டெல்லி ஆம் ஆத்மியின் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், "அரவிந்த் கெஜ்ரிவால் தான் முதல்வர், அவர் தான் முதல்வராக இருப்பார் என கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர் எனக் கூறினார். மேலும் அனைவரும் சிறையில் அடைக்க வேண்டும் என பா.ஜ., விரும்புகிறது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் இதை அனுமதிக்க மாட்டார். சிறையில் இருந்து கொண்டே ஆட்சியை நடத்துவார்" எனக் கூறினார். 


மேலும் படிக்க - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது... அமலாக்கத்துறை அதிரடி - அடுத்தது என்ன?


சட்டம் என்ன சொல்கிறது?


அரசியலமைப்பு சட்டத்தில் அத்தகைய நிலைமை குறித்து தெளிவான விதிகள் இல்லை. கைது செய்யப்பட்டால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை. சிறையில் இருந்து ஆட்சியை நடத்துவதைத் தடுக்கும் எந்தச் சட்டமும் இல்லை. சட்டவிதிகளின்படி, குற்றம் நிரூபிக்கப்படும் முன், எந்த ஒரு அரசியல் தலைவரும் முதல்வர், அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ. போன்ற பதவிகளில் நீடிக்கலாம. சிறை அடைந்தபின் பதவி விலக வேண்டும் என சட்டம் இல்லை. சிறையில் இருக்கும்போதும் ஆட்சியை வழி நடத்தக் கூடாது என எங்கையும் இல்லை. சிறையில் இருந்து கொண்டுதான் ஆட்சியை நடத்துங்கள்..


அரசியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?


அரசியல் நிபுணர்கள் கூறுகையில், "கைது செய்யப்பட அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டால், அவர் முதல்வர் பதவியில் நீடிப்பாரா? என்பது நீதிமன்றத்தை சார்ந்துள்ளது. மறுபுறம் இது சம்பந்தமாக அரசியலமைப்பு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் என்று எதுவும் இல்லை. இதுவரை எந்த பிரதமரோ அல்லது முதலமைச்சரோ சிறையில் இருந்தே ஆட்சியை நடத்துவது போன்ற நடந்தில்லை எனக் கூறினார்கள்.


சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்துவது சாத்தியமா?


அமைச்சரவைக் கூட்டங்கள், துறைகளின் செயல்பாடு, கோப்புகளில் கையெழுத்திடுதல் போன்ற பல முக்கியப் பணிகளை முதல்வர் செய்ய வேண்டியிருக்கும். சிறையில் இருந்துக்கொண்டே இவற்றை எல்லாம் செய்வது சாத்தியமில்லை. வீடியோ கான்பரன்சிங் மூலம் கெஜ்ரிவால் சில வேலைகளைச் செய்யலாம். ஆனால் அதற்கும் சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். சிறையில் இருந்துக்கொண்டு அரசு பணிகளை மேற்கொள்ள சிறை விதிகளில் இடமில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சிறையில் இருந்து ஆட்சியை நடத்துவது கெஜ்ரிவாலுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.


மேலும் படிக்க - கைதுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற கெஜ்ரிவால்.. ஆம் ஆமி போராட்டம்.. மெட்ரோ நிலையம் மூடல்..


டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை விதிக்க துணைநிலை ஆளுநர் பரிந்துரைக்கலாம்?


டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால், கெஜ்ரிவால் விவகாரத்தில் துணைநிலை ஆளுநரின் பங்கும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. லெப்டினன்ட் கவர்னர் அரசியலமைப்பு எந்திரத்தின் தோல்வியை காரணம் காட்டி, 239AB விதியின் கீழ் ஜனாதிபதி ஆட்சியை விதிக்க பரிந்துரைக்கலாம். இதையடுத்து, கெஜ்ரிவால் முதல்வராக நீடிக்க முடியாது. குடியரசுத் தலைவர் ஆட்சி மூலம் டெல்லி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். கெஜ்ரிவாலுக்கும், லெப்டினன்ட் கவர்னருக்கும் இடையே நிலவி வரும் மோதலைக் கருத்தில் கொண்டு, லெப்டினன்ட் கவர்னர் இதைச் செய்யக்கூடும் என பரவலாக பேசப்படுகிறது. 


இதற்கு முன் இப்படி ஒரு வழக்கு வந்திருக்கிறதா?


ஒரு பிரதமரோ அல்லது முதலமைச்சரோ சிறையில் இருந்தபடியே ஆட்சியை நடத்தியது போன்ற வழக்கு இதற்கு முன் வந்ததில்லை. இருப்பினும், ஜெயலலிதா, லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பல முதல்வர்கள் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பே பதவியை ராஜினாமா செய்தனர். சமீபத்தில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் EDயால் கைது செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன் சோரன் ராஜினாமா செய்தார், பின்னர் சம்பாய் சோரன் முதல்வரானார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க - அவரது கைதுக்கு அவரது செயல்களே காரணம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் குரு அன்னா ஹசாரே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ