புதுடெல்லி: டெல்லியில் (Delhi) காற்றின் தரம் இன்று (சனிக்கிழமை) காலையில் கூட மிகவும் மோசமாக இருந்தது. சனிக்கிழமை காலை முதல் டெல்லி நகரத்தின் மீது ஒரு பனி மூடியிருப்பது போல காற்றின் மாசு காணப்பட்டது. இதைப்பார்த்த மக்கள் மிகவும் அச்சத்துடனே உள்ளனர். டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் அதிகமாக குழந்தை உட்பட பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காற்று தர குறியீட்டின் (AQI) படி, டெல்லி தமிழ் பள்ளிக்கூடம் அமைத்துள்ள லோதி சாலை பகுதியில் PM 2.5 மற்றும் PM 10 ஆகியவை சனிக்கிழமை 500 ஆக பதிவாகியுள்ளன.


சனிக்கிழமை, டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்தது. டெல்லியின் திர்பூரில் பிஎம் 10 நிலை 392 மற்றும் பிஎம் 2.5 நிலை 455 ஐ எட்டியது. அதே நேரத்தில், டெல்லி பல்கலைக்கழகத்தில் பிஎம் 2.5 நிலை 404 ஆகவும், பிஎம் 10 நிலை 397 ஆகவும் இருந்தது.


நேற்று (வெள்ளிக்கிழமை) ஈபிசிஏ டெல்லியில் "பொது சுகாதார அவசரநிலை" என்று அறிவித்தது. மறுபுறம், தில்லி அரசு அனைத்து பள்ளிகளையும் நவம்பர் 5 வரை மூட உத்தரவிட்டது.


இது தவிர, ஒற்றைப்படை-சமமான வாகன எண் விதி வரும் நவம்பர் 4 முதல் நவம்பர் 15 வரை தேசிய தலைநகரான டெல்லியில் நடைமுறையில் இருக்கும் எனவும் அரசு அறிவித்துள்ளது.