காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து கர்நாடகா மேல்முறையீடு!!
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு!!
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு!!
வருகின்ற ஜூலை 2 ஆம் தேதி காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், காவிரி விவகாரம் குறித்து இன்று கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய அரசு அமைத்துள்ள காவிரி ஆணையத்திற்கு அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா தாக்கல் செய்துள்ள மூல மனுவை மீண்டும் விசாரிக்கும்படி மனுத்தாக்கல் செய்யவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி வரும் ஜூலை 18 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடரில் அனைத்து எம்பிக்களும் காவிரி விவகாரம் குறித்து பிரச்னை எழுப்ப திட்டம்.
மேலும், காவிரி வழக்கு தீர்ப்பிலுள்ள ‘ஸ்கீம்’ பற்றி விளக்கம் கேட்டு மேல்முறையீடு செய்ய கர்நாடகா தீர்மானம். காவிரி ஆணைய விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் எடுத்துள்ளதாக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.