7 வங்கிகளை ஏமாற்றியதாக ரோட்டோமக் இயக்குநர்கள் மீது CBI வழக்கு!
ரோட்டோமேக் பென்ஸ் நிறுவனத்தின் தலைவர் விக்ரம் சோத்தாரி மீது CBI வழக்கு தொடர்ந்துள்ளது!
ரோட்டோமேக் பென்ஸ் நிறுவனத்தின் தலைவர் விக்ரம் சோத்தாரி மீது CBI வழக்கு தொடர்ந்துள்ளது!
7 வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றியதாக ரோட்டோமேக் பென்ஸ் நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று CBI அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக ரோட்டோமேக் நிர்வாக இயக்குனர்கள் விக்ரம் கோத்தரி, சாதனா கோத்தாரி, ராகுல் கோத்தாரி ஆகியோர் மீதும், பேங் ஆப் பரோடா ஊழியர்கள் சிலரின் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளது.
CBI பிரிவு அதிகாரிகள் தொடுத்துள்ள வழக்கில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, அலகாபாத் வங்கி உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை வங்கிகளில் ரூ. 4,232 கோடி ரோட்டோமேக் கடன் பெற்றுள்ளது.
இந்த கடனை அவர்கள் முறையாகத் திருப்பிச் செலுத்தவில்லை என வங்கிகள் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளன. அதேவேலையில் விக்ரம் கோத்தாரி வழங்கிய ரூ 600 கோடி மதிப்பிலான காசோலை திரும்பிவிட்டது என்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புகார் அளித்துள்ளது.
இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. குறிப்பாக கான்பூர் அலுவலகங்களிலும், அவரது வீட்டினிலும் சோதனை நடத்தப்பட்டது.
அதேவேலையில் அவரது குடும்பத்தார் உடனும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. புது டெல்லியில் குறிப்பிட்ட இடங்களில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விரைவில் அங்கும் சோதனை நடத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.