புதுடெல்லி: கொரோனா தொற்று காரணமாக CBSE பன்னிரெண்டாம் வகுப்புகளின் பொதுத்தேர்வு குறித்த குழப்பம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என அனைவருக்கும் அழுத்தம் அதிகரித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் CBSE பொதுத் தேர்வுகள் குறித்து கலந்துரையாடி சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்க நாளை, அதாவது ஞாயிற்றுக்கிழமை (மே 23) அன்று ஒரு உயர் மட்ட சந்திப்பு நடக்கவுள்ளது. முக்கிய பாடங்களுக்கு மட்டுமே தேர்வுகளை நடத்துதல், அந்தந்த மாநிலங்களில் உள்ள கோவிட் -19 நிலைமையை மனதில் கொண்டு இரண்டு கட்டங்களாக தேர்வுகளை திட்டமிடுதல் அல்லது உள் மதிப்பீட்டு (Internal Assessment) திட்டத்தை வகுத்தல் ஆகியவை உட்பட பல முக்கிய விஷயங்கள் பற்றி நாளை பேசப்படும் என கூறப்பட்டுள்ளது. 


மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கல்வி அமைச்சகம் பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளை கோரியுள்ளது. 


செய்தி நிறுவனமான பி.டி.ஐயின் சிபிஎஸ்இ ஆதாரங்களின்படி, நாளை சந்திப்பில் கலந்துரையாடப்படக் கூடிய சில முக்கிய விஷயங்கள் பின்வருமாறு:


- முக்கிய பாடங்களுக்கு மட்டும் வழக்கமான முறையில் தேர்வை நடத்துதல்.
- பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள கோவிட் நிலைமையைப் பொறுத்து அனைத்து தேர்வுகளையும் இரண்டு கட்டங்களில் நடத்துதல்.
- பொதுத் தேர்வுகளை (Board Exams) ரத்து செய்து மாற்று முறை மூலம் மதிப்பீடு அளிப்பது.
- தொற்று குறையும் வரை தேர்வுகளை ஒத்தி வைப்பது. 


ALSO READ: CBSE பொதுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டுமா; பள்ளிகள் கூறுவது என்ன


எனினும், ஒரு மூத்த CBSE அதிகாரி, "இதுவரை எதுவும் இறுதி செய்யப்படவில்லை. அனைத்து தரப்பினரின் பரிந்துரைகளையும் பரிசீலித்த பின்னரே கல்வி அமைச்சகம் இறுதியான முடிவை எடுக்கும்" என்று கூறினார். இந்த சந்திப்பில் மற்ற மூத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில கல்வி அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களில் பெரும் பகுதியினர் கோரி வந்தாலும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு மாற்று முறைகளுக்கான சாத்தியக்கூறுகள் பற்றிய கருத்துக்கள் உள்ளன. 


CBSE பொதுத்தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம், அல்லது பள்ளிகள் உள் தேர்வு முறையை பின்பற்றலாம் என ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறினார். 


"இந்த தேர்வுகளில் MCQ வகையில் வினாக்களை உருவாக்கலாம். மாணவர்கள் நுட்பமான வகையில் யோசித்து விடை அளிக்கும் வகையிலான கேள்விகளை ஆன்லைன் தேர்வில் கேட்கலாம்" என்று அவர் கூறினார்.


எனினும், தேர்வுக்கான மாற்று முறையை தேர்ந்தெடுக்கும் முன்னர், நாட்டில் உள்ள டிஜிட்டல் வேறுபாடுகளை கருத்தில் கொள்வது நல்லது என ஒரு கல்வியாளர் கருத்து தெரிவித்துள்ளார். 


"12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் சுயாதீனமாக நிர்வகிக்கப்படும் தேர்வுகள் அல்ல. எந்தவொரு மாற்றத்திற்கும் உட்படுத்தப்படுவதற்கு முன்னர், அதற்கான காரணிகள் முறையாகவும் விரிவாகவும் பரிசீலிக்கப்பட வேண்டும்" என்றார் அவர். 


இப்படி பல்வேறு மாறுபட்ட கருத்துகள் உள்ள நிலையில், மாற்று முறையை தேர்ந்தெடுப்பது ஒரு சவால் மிகுந்த பணியாகவே இருக்கும். இந்தியாவில் டிஜிட்டல் பிளவு என்பது ஒரு யதார்த்தம் என்பதால், ஆன்லைன் முறையில் தேர்வுகளை நடத்துவதிலும் பல சிக்கல்கள் உள்ளன. ஆன்லைன் முறையில் தேர்வுகளை நடத்த CBSE, முழு உள்கட்டமைப்பையும் புதுப்பிக்க வேண்டும். மேலும் கிராமப்புற, செமி அர்பன் மற்றும் நகர்ப்புற பள்ளிகள் என அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டும். 


COVID-19 தொற்றுநோயில் தொடர்ந்து எழுச்சி காணப்பட்டதால், ஏப்ரல் 14 ஆம் தேதி CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைத்ததாகவும் அறிவித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்து ஜூன் 1 அல்லது அதற்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என்று CBSEஅறிவித்திருந்தது.


ALSO READ: CBSE: 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு: கல்வி அமைச்சகம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR