CBSE பொதுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டுமா; பள்ளிகள் கூறுவது என்ன

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியதை அடுத்து, CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் சென்ற மாதம் அறிவித்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 21, 2021, 10:36 AM IST
  • கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியதை அடுத்து, CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன்.
  • 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் சென்ற மாதம் அறிவித்தது.
CBSE பொதுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டுமா; பள்ளிகள் கூறுவது என்ன title=

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியதை அடுத்து, CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் சென்ற மாதம் அறிவித்தது. ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என்று கூறியது.

பல தரப்பிலிருந்தும் CBSE பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழவே, இந்த வார தொடக்கத்தில் கல்வி அமைச்சகம் மற்றும் CBSE ஒரு கூட்டத்தை நடத்தியது. இன்று இது குறித்த உயர் மட்ட சந்திப்புக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

இந்நிலையில், தொடர்ந்து சிபிஎஸ் இ தேர்வுகள் என்ற கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இதை அடுத்து சி.வி.எஸ்.இ பள்ளிகளின் தேசிய கவுன்சில், இது தொடர்பாக  மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்கிடம்,  12ம் வகுப்பு தேர்வு சான்றிதழ் என்பது பல்வேறு கல்வி நிறுவனங்களில் படிக்க மிக முக்கியமான தகுதித் சான்றிதழ் என்பதால், COVID -19 தொற்றுநோய் காரணமாக அதை தாமதப்படுத்தலாமே தவிர, ரத்து செய்யப்படக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளது.  தேவைப்பட்டால், மாற்று வழிகளை ஆலோசனை செய்து தேர்வுகளை நடத்தலாம் என ஆலோசனை கூறியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த சிபிஎஸ்இ பள்ளிகளின் தேசிய கவுன்சில் பொதுச் செயலாளர் இந்திரா ராஜன், “நல்ல தரமான, சிறந்த தொழில்முறை நிறுவனங்களில் படிக்க வேண்டும் . தேர்வுகள் நடத்த முடிவெடுப்பது தான் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு நிம்மதி அளிக்கும் விஷயமாக இருக்கும் என்றும் ராஜன் கூறினார்.

இதற்கிடையில், சிபிஎஸ்இ பள்ளிகள் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றொரு ஆன்லைன் பயிற்சி தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளன.

பள்ளிகளில் கோடைகால விடுமுறைகள் தொடங்கியுள்ளன. ஆனால் சிபிஎஸ்இ பள்ளிகளில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொது தேர்வுக்காக தயாராகும் மாணவர்களுக்கு, உதவிடும் வகையில், அவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கோடை விடுமுறைக்குப் பிறகு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிய பின்னர்  தேர்வு நடத்தவும் பள்ளிகள் திட்டமிட்டுள்ளன.

ALSO READ | CBSE: 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு: கல்வி அமைச்சகம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News