மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இன்று 10ஆம் வகுப்புக்கான முடிவுகளை அறிவிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்வு முடிவுகள் இன்று cbseresults.nic.in  என்ற வலைதளத்தில் அறிவிக்கப்படும். எனினும், 10 ஆம் வகுப்பு  தேர்வு முடிவுகளின் தேதி மற்றும் நேரங்களை வாரியம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாணவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான cbseresults.nic.in, cbse.gov.in  என்ர வலைதளங்களில் சரிபார்க்கலாம்.


ஜூலை 30, வெள்ளிக்கிழமை 12 ஆம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை CBSE அறிவித்த நிலையில், 10 ஆம் வகுப்பு முடிவுகளுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர், வெள்ளிக்கிழமை  அன்று இது குறித்து கூறுகையில், 10 ஆம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை விரைவில் அறிவிக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால் வெளியீட்டு தேதி குறித்து வாரியம் எதுவும் சொல்லவில்லை.


ALSO READ | 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள்: ஹால் டிக்கெட் பதிவிறக்கம் துவங்கியது


சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு 2021 முடிவை வெளியிடுவதற்காக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவை ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


பள்ளிகளிடம் பெற்ற இறுதி முடிவுகளை வாரியம் இன்னும் சரிபார்க்கவில்லை, என்றும் பள்ளிகள் சமர்ப்பித்த முடிவுகளில் கல்வி வாரியம் திருப்தி அடைந்த பின்னரே சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு வாரிய தேர்வு 2021 முடிவுகள் வெளியிடப்படும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 99 ஆகும். இது ஒரு சாதனை அளவாகும். கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 90 சதவீதம். 2019 ஆம் ஆண்டில் 83 சதவீத குழந்தைகள் தேர்ச்சி பெற்றனர்.


முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன்,  cbseresults.nic.in மற்றும் cbse.gov.in இல் வெளியிடப்படும். மாணவர்கள் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு வாரிய தேர்வு 2021 முடிவை Digilocker, Umang செயலி மற்றும் எஸ்எம்எஸ் மூலம் அணுக முடியும்.


ALSO READ: 7th Pay Commission சூப்பர் செய்தி: அகவிலைப்படி 28%-லிருந்து 31 % ஆக உயரும்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR